சென்னையில் நாளை முதல் மழை சூடு பிடிக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவு!

அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னையில் மழை பெய்யத் தொடங்கலாம் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

TN Weatherman Update

சென்னை :தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், காற்றழுத்த தாழ்வு மையம் வடக்கு நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று முதல் 4-5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்னும் 1-2 மணி நேரத்தில் மழை தொடங்கி அடுத்த 4-5 நாட்களுக்கு நன்றாக மழை பொலிவு இருக்கும். காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக்குக் கீழே இருக்கிறது இப்போது அது வடக்கு நோக்கிய நகரத் தொடங்கியுள்ளது, அது மெதுவாக நகர்வதால் 4-5 நாட்களுக்கு டிச.1 வரை கனமழை பெய்யக்கூடும்.

மேலும், நாளை முதல் சென்னையில் மழை சூடு பிடிக்கத் தொடங்கலாம். உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்குக் கீழே கரையைக் கடப்பதாக தெரிகிறது, எனவே இன்று முதல் டிச.1 வரையில் மழைக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்”, என பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

unknown node