சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காற்றழுத்த தாழ்வு மையம் வடக்கு நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று முதல் 4-5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். […]
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும், நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் கூடுதலாக மழை பெய்யும் என்பதால், அதனை எதிர்கொள்ள […]
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுவரும் கடுமையான மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் உபரி நீர் வெளியேற்றபட்டு வருகின்றன.இந்த உபரி நீர் அதிகமாக வருவதால் ஒகேனக்கல் அணை நிரம்பி வருகிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுகினால் பல அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன.ஒகேனக்கலில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காவிரி டெல்டா பாசனத்திர்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.முதல்வர் தண்ணீர் திறந்து விடுவது இதுவே முதல் முறை.இன்று காலை 10 மணி அளவில் முதல்வர் […]