சென்னை : சென்னைக்கு மிகக் குளிர்ச்சியான இரவை கொடுப்பதற்காக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” இன்றும் நாளையும் பெய்யும் மழையை கண்டு மகிழுங்கள். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், […]
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக எந்தெந்த பகுதியில் வானிலை எவ்வாறு இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் , “ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக பாண்டிச்சேரி பகுதியில் கனமழை […]
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், காற்றழுத்த தாழ்வு மையம் வடக்கு நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று முதல் 4-5 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். […]
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம், நவம்பர் 2-வது வாரத்தில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் , தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம், ராயலசீமா, கேரளா & மாஹே ஆகியவற்றில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. உருவாகவுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு பலவீனமாக இருக்கும் எனவும் தமிழகத்திற்கு இதனால் பாதிப்பு இல்லை எனவும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்து பதிவு ஒன்றையும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், ரெட் அலெர்ட்டும் நேற்றைய தினம் கொடுக்கப்பட்டது. ஆனால், நேற்று முழுவதும் சென்னையில் அந்த அளவிற்கு மழை பொழிவு என்பது இல்லாமல் இருந்தது. இதனால், நேற்று இரவு ரெட் அலெர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுக் கொண்டது. மேலும், சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட […]
TN Rain: தமிழகத்தில் அடுத்த 4 முதல் 5 நாட்களில் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல். கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், மதுரை, தருமபுரி, கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், சில பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் […]