BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஒருவர் பலி .! பாதிப்பு 690 ஆக உயர்வு .!

தமிழகத்தில்  இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில்

தமிழகத்தில்  இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 621-இல் இருந்து 690 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனையில் சிகிக்சை பெற்ற 64 வயது  பெண் உயிரிழந்துள்ளார்.

இன்று பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர்  டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 19 பேர்  வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு நாளில் மட்டும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழ்நாட்டில் இறப்பை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் கூறினார்.