பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நாளை மறுநாள் தமிழகம் வருகை.!

BJP leader JP Nadda is coming to Tamil Nadu the next day to participate in the Namma Ur Pongal program....

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்.

தமிழர் திருநாளை முன்னிட்டு 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்ள இருப்பதாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.

இதனிடைய, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வரும் அதே நாளில் ராகுல் காந்தியும் தமிழகம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.14ஆம் தேதி பொங்கல் அன்று அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.