"டிடிவி தினகரன் குறித்து நயினார் நாகேந்திரனிடம் கேளுங்கள்" – எடப்பாடி பழனிசாமி பதிலடி!

ஒ.பி.எஸ்.-ஐ இணைக்க முடியாது எனக் கூறி, கூட்டணி பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

EdappadiPalaniswami

சென்னை :திருப்பத்தூரில் ஆசிரியர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு சிங்கம் தே பிரதிநிதிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கூட்டணியில் யாரை இணைப்பது என்பது உள்பட எந்த முடிவாக இருந்தாலும் அதை அதிமுகதான் எடுக்கும்.

பாஜக அதிமுக கூட்டணியில் மீண்டும் ஒ.பி.எஸ் இணைவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் கூறி வந்தார். டிடிவியும் ஒ.பி.எஸ். உடன் தேசிய பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பது எந்த காலத்திலும் நடக்காது என்று கூறி, கூட்டணியில் ஒ.பி.எஸ். இணைவார் என நயினார் கூறி வந்த நிலையில் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், நானும் டிடிவியும் ஒன்றாக மேடை ஏறுவோம் என்று நயினார் நாகேந்திரன்தானே கூறினார், அதைப்பற்றி அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.