நெல்லையில் இளைஞர் கொலை – 2 சிறுவர்கள் கைது.!

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெங்கடேஷ் என்ற இளைஞர் வெட்டி படுகொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Tirunelveli - Murder

திருநெல்வேலி :நெல்லை ரயில் நிலையம் முன்பு 19 வயது வெங்கடேஷ் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நண்பர்களுடன் டீ குடிக்க சென்ற வெங்கடேஷ்-க்கும் கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் வெங்கடேஷை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு கும்பல் தப்பியோடிய நிலையில், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் தலைமையிலான போலீசார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைக்கான காரணமாக காதல் விவகாரம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையாளர்கள் தலைமையில் தனி இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நெல்லையில் இளைஞர் கொலை – 2 சிறுவர்கள் கைது.!