சிவகங்கை அருகே இளைஞரின் நெஞ்சில் பாய்ந்த சுழுக்கியை மருத்துவர்கள் எக்ஸ்ரே உதவியுடன் எடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கு அருகில் உள்ள உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 20 வயது ஆகும். இந்த இளைஞர் தவறி கீழே விழுந்த போது ’சுழிக்கி’ என்ற எலி குத்தும் ஆயுதம் நெஞ்சில் பாய்ந்துள்ளது. இவரது வீட்டின் பின்புறம் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் வீட்டை சுற்றி எலிகள் தொல்லை இருந்து வந்தது.எனவே எலிகள் வீடுகளைச் சுற்றி தொல்லை கொடுத்து […]
நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் உள்ளது பென்னை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விஜயன் என்ற இளைஞர், நேற்று மாலை தனது நண்பரான சுரேஷுடன் பட்டவயல் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து வந்துகொண்டுருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காட்டுயானை, இருவரையும் துரத்தியது. இருவரும் நீண்ட தூரம் ஓடினார்கள். அனல் அவர்களை யானை விடாமல் துரத்தியது. அந்த யானை விஜயனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. கீலே விழுந்த விஜயனை யானை காலால் மிதித்து கொன்றது. அதன்பின் சுரேஷை […]
கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தின் ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டம் வெண்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்தும், அவரது நண்பர் தீனாவும், இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு […]
தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கானா பாடல் பாடி சீமானுக்கு மிரட்டல் கொடுப்பது போன்ற வரிகளை போட்டு டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த இளைஞர்கள் 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களும் டிக்டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இதில் அடிமையாகி இருப்பதும் டிக்டாக் செயலியை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தி வருவதும் […]
நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை குஜராத்தை சேர்ந்த 22 வயதான ஹாசன் சஃபின் பெற்றுள்ளார். ஹாசன் சஃபின் பேசுகையில் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே தனது கனவு. குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்திலுள்ள கனோதார் கிராமத்தை சேர்ந்த சஃபின், கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய குடிமை பணிகள் தேர்வில் 570-வது ரேங்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து ஐ.பி.எஸ் பயிற்சி முடிந்து ஜாம்நகர் மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஃபின். இந்நிலையில், வரும் […]
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள சாலை ஒன்றில் கழிவுநீரில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் கழிவுநீர் வெளியேறி கொண்டிருந்தது. அப்பொழுது அந்த வழியாக சென்று கொண்டிருந்த நான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், அந்தக் கால்வாயை தாவி கடக்க முயற்சி செய்தான். ஆனால் நிலை தடுமாறி அந்த சிறுவன் கால்வாயின் விழுந்தான். இதனைப் பார்த்த அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் அந்த சிறுவனை கால்வாயில் இருந்து மீட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பாராட்டினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அதிகமாக ஊடுருவி அங்குள்ள இளைஞர்களிடையே தீவிரவாதத்தை பரப்பி தீவிரவாதிகளாக இளைஞர்களை மாற்றி வருகின்றனர். ஏற்கனவே அங்கு தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக ரயில் சேவை 50வது தடவையாக நிறுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் நவம்பர் வரை சுமார் 117 காஷ்மீர் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி உள்ளனர். இந்த தகவல் அங்குள்ள போலீசார் வழக்கு பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. source : dinasuvadu.com