சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (01-01-2025) சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி […]
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு நேரில் வந்த மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இன்று காலை 10 மணி அளவில், திருச்செந்தூர் சாலையில் உள்ள நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு விசாரணைக்காக மாயாண்டி என்பவர் வந்துள்ளார். இவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே 4,5 பேர் அடங்கிய […]
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டியை நீதிமன்ற வளாகம் முன்பு அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை […]
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாயாண்டி என்ற அந்த இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். பின்னர், காவல் துறையினர் அவர்களை […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை, நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், […]
திருநெல்வேலி: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை (டிச,13) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]
தூத்துக்குடி : வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (டிசம்பர் 12) பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்றும் கனமழை பெய்துள்ள நிலையில், நாளை விடுமுறை அறிவிப்பு. அதன்படி, தூத்துக்குடி கனமழை காரணமாக நாளை 13.12.2024 அன்று பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர […]
திருநெல்வேலி : மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் நீர் குளம் போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருநெல்வேலி,தென்காசி , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அதன்படி தற்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வானிலை மைய எச்சரிக்கையை […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? என்பதற்கான விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும். […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட தகவலின்படி, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் […]
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மேடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாகவும் மாறியது. முதற்கட்டமாக, அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை செய்யவில்லை என கொள்கை பரப்புச் செயலாளர் புகார் கூறியதால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் மாவட்ட செயலாளர் […]
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், திருநெல்வேலியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர். நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி […]
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும் சமீபத்தில் சர்ச்சைகளும் சிக்கியது . அது என்னவென்றால் அமரன் படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல சித்தரித்து உள்ளதாகவும், எனவே, படத்தை தடை செய்ய வேண்டும் என சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதன் காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, கமல் அலுவலகம் முன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு […]
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7) மாலை 4 மணிக்கு கோவில் கடற்கரையில் வைத்து நடைபெற உள்ளது. இந்த சூரா சம்ஹார விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இப்பொழுதே கோவிலில் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என […]
திருநெல்வேலி : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த சூழலில், இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று முதல் நாளை காலை வரை மிக கனமழைக்கு […]
சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3,4 இல் தாம்பரம் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நெல்லை – தாம்பரம் இடையே நவ.3 ஆம் தேதியும், தாம்பரம்- நெல்லை இடையே நவ.4 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி முடிந்து சென்னை திரும்புபவர்களுக்காக நவம்பர் 3ஆம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை – தாம்பரம் இடையேவும், மறு மார்க்கத்தில் நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 2.30 […]
சென்னை : தமிழகத்தில் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி,திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
நெல்லை : ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியில் எதிர்வீட்டில் வசிக்கும் தங்கம்மாள் எனும் பெண் முன்விரோதம் காரணமாக 3 வயது சிறுவனை கொலை செய்துள்ளார். இன்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன் திடீரென மாயமாகி இருக்கிறான். அதைத் தொடர்ந்து பல இடங்களில் அந்த சிறுவனைத் தேடியும் கிடைக்காததால், அருகில் இருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெறிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த […]
மேயர் தேர்தல்கள் : நேற்று நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில் திமுக கூட்டணிக்கு 51 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. முன்னாள் முன்னர் மேயர் சரவணன் அவர்களுக்கும் , திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிலை நிலவி வந்ததை அடுத்து , தனிப்பட்ட காரணங்களை கூறி சரவணன் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். நெல்லை மேயர் தேர்தல் : மேயர் சரவணன் […]
தொல்லியல் துறை : தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் துறை பணிகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அதில், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பற்றி குறிப்பிட்டார். அவர் குறிப்பிடுகையில், திருமலை நாயக்கர் அரண்மனை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்டச் சின்னமாக 1972-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் அறிவித்த தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை […]