ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து என்ன செய்தாலும், அது தொழில்நுட்பத்தின் கண்ணில் சட்டெனெ பட்டுவிடுகிறது. சற்று தாமதமானாலும், குற்றவாளி தப்ப முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுள்ளது. வடக்கு ஸ்பெயின் நாட்டில் ஆண்டலூஸ் எனும் கிராமத்தில் ஜார்ஜ் லூயிஸ் பெரெஸ் எனும் நடுத்தர வயது நபர் ஒருவர் கடந்த வருடம் அக்டோபரில் காணாமல் போயுள்ளார். அவரை தேடும் […]
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு நேரில் வந்த மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இன்று காலை 10 மணி அளவில், திருச்செந்தூர் சாலையில் உள்ள நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு விசாரணைக்காக மாயாண்டி என்பவர் வந்துள்ளார். இவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே 4,5 பேர் அடங்கிய […]
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டியை நீதிமன்ற வளாகம் முன்பு அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை […]
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாயாண்டி என்ற அந்த இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். பின்னர், காவல் துறையினர் அவர்களை […]
டெல்லி: ப்ரேக்அப் செய்ததால் ஆண் நண்பர் உள்ளிட்ட 2 பேரை கொலை செய்ததாக ஹிந்தி நடிகை நர்கீஸ் பக்ரியின் சகோதரி ஆலியாவை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை ஆலியா ஃபக்ரி ஆவார். நர்கிஸ் மற்றும் ஆலியா இளமையாக இருந்தபோது, அவர்களின் பெற்றோர் விவாகரத்து செய்தனர். இந்நிலையில், நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி அலியா, நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் நகரில் வசித்து வந்துள்ளார். அண்மையில், ஆலியாவுடனான உறவை ஆண் நண்பர் ஜேக்கப் பிரேக் ஆப் […]
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வசிகாமணி, அலமாத்தாள் எனும் வயதான தம்பதி தங்களுக்கு சொந்தமான தோப்பு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் ஓர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கவிதா எனும் மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று செந்தில் குமார் கோவையில் இருந்து கிராமத்தில் ஒரு குடும்ப விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இப்படியான சூழலில் […]
சிவகங்கை : இன்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி பகுதியில் அப்பகுதி அதிமுக கிளை செயலாளர் கணேசன் என்பவரை ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. இதுகுறித்து திருப்பாசேத்தி பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டாகுடியை சேர்ந்த கணேசன் (வயது 70)அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பணியை செய்தும், அப்பகுதியில் மளிகை கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும், அதிமுக கட்சியில் கிளை செயலாளராகவும் கணேசன் இருந்து வருகிறார். ரியல் எஸ்டேட் […]
மதுரை: நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணை செயலாளராக பொறுப்பில் இருந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர். இன்று காலை பாலசுப்ரமணியன் வழக்கம் போல நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை, சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் இன்று காலை பாலசுப்பிரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல் கூரிய ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் […]
கோவை: 2015இல் பட்டியலின இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கோவையில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில், கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு […]
மதுரை : தொடர்ச்சியாக மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த ஒரு வாரத்தில் 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் 70 வயதான மூதாட்டி முத்துலெட்சுமி. இவர் சடலமாக தன்னுடைய வீட்டில் மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி முத்துலெட்சுமி அணிந்திருந்த கம்மலை காணாததால், நகைக்காக கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். […]
சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஸ் உட்பட 8 பேரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான சண்முகம், நேற்று இரவு அம்பாள் ஏரி பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி சென்று கொண்டிருக்கையில் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]
சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதி மாரியம்மன் கோயில் 4வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு வந்துள்ளார். அப்போது சஞ்சீவிராயன்பேட்டை […]
வேலூர் : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியூர் பகுதியில் பிரபல ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த கும்பலை ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த பிரபல ரவுடி எம். எல். ஏ ராஜா என்பவர் கடந்த ஜூலை-2 ம் தேதி வீட்டை விட்டு பைக்கில் வேறொரு இடத்திற்க்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து பொதுமக்கள் பலர் முன்னிலையில் அவரை சரமாரியாக […]
ஆந்திரப் பிரதேசம் : விஜயவாடா – பிருந்தாவன் காலனியில் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிருந்தாவன் காலனியில் அந்த நபர் வியாபாரியை அவருடைய மகள் கண்முன்னே வெட்டி கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமே, வியாபாரியின் மகள் காதல் விவகாரம் தான். பவானிபுரம் செருவு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீராமச்சந்திர பிரசாத் (வியாபாரி) என்பவர் பிருந்தாவன் காலனியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் தர்ஷினி இன்ஜினியரிங் மேல்நிலை […]
மத்திய பிரதேசம்: சிந்த்வாரா மாவட்டத்தில் நேற்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் தலைநகரில் இருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் உள்ள போடல் கச்சார் எனும் கிராமத்தில், நேற்று (செவ்வாய்) இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக மஹுல்ஜிரி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என PTI […]
நெல்லை: மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா. 2012இல் கொலை செய்யப்பட்ட தேவேந்திரகுள வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜா மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் […]
Madurai: மதுரையில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது. Read More – திருச்சி என்றாலே திருப்புமுனை! பாஜகவை வீழ்த்தி… தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு கூடல் புதூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் […]
கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா நகரத்தில் கூகுள் மென்பொருள் பொறியாளர் ( Software Engineer ) ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லீரேன் சென் (27 வயது) அவரது மனைவி சுவானி யு-வின் உடலுக்கு அருகில் ரத்த கரையுடன் இருந்தநிலையில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் கூகுள் பொறியாளர்கள் ஆவார்கள். இது குறித்து சாண்டா கிளாரா நகர போலீசார் கூறுகையில் “கடந்த ஜனவரி 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் […]
பெங்களூருவை சேர்ந்த தனியார் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம்(ஞாயிறு) நள்ளிரவில் கார் மூலம் பெங்களூரு நோக்கி வந்துள்ளார். கோவாவில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணிக்க அதிக கட்டணம், அதிக நேரம் என்பதால், விடுதி ஊழியர்கள் விமானத்தில் பயணிக்கும்படி […]
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா அருகே நெஞ்சக மருத்துவமனை அருகே புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணியில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பீகாரை சேர்ந்த சுபாஷ் குமார் மற்றும் சுனில் ஆகிய இருவரும் உணவு தயார் செய்வதர்க்காக அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளனர். தொடர்மழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி..! மக்களுக்கு வெள்ள அபாய […]