ஆன்லைன் வகுப்பு.. தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு.!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து,  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து,  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால்,  தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி  சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்தபோது, ஆன்லைன் கல்வி தொடர்பாக தமிழக அரசின் வழிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்றும் என நம்புகிறோம்  மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.