10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கொரோனா அதிகளவில் பரவி வருவதால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஜனவரி 31 ஆம் தேதி வரை […]
+1 வகுப்புகளை ஜூன் 3-வது வாரத்தில் தொடங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வந்த நிலையில், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது, இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கை பிரப்பித்து அதன் தொற்று பரவலை படிப்படியாக குறைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு […]
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளன. தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை, ஆன்லைன் வகுப்பு வழிகாட்டும் முறை உள்ளிட்டவை பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் , […]
ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக நாம் புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது. தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கூடுதல் விதிமுறைகளை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. சென்னையில் இணையவழி வகுப்பில் […]
கொரோனா பரவல் எதிரொலி காரணமாக,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா 2 வது அலையானது விஸ்வரூபம் எடுத்து தீவிரமாகப் பரவி வருவதால்,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கையில்,”அதிகப்படியான கொரோனா […]
கர்நாடகாவில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அக்,.12தேதி முதல் அக்,.30ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்:- கர்நாடக மாநில கல்வித்துறை அக்,.12 முதல் 3 வாரங்களுக்கு இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது.இந்த காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் விடுப்பு வழங்கப்படும் என்று ஆன்லைய்ன் வகுப்புகளும் 3வாரக் காலத்திற்கு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக வகுப்புகள் வித்யாமக திட்டம் நிறுத்தப்பட்டுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து அவர் ஆசிரியர்கள் […]
ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. தொலைதூரக் கல்வி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது குறித்து கடந்த 4-ம் தேதி யுஜிசி சார்பில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஜனவரி 2021-ம் ஆண்டுக்கான படிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கலாம். ஆனால், முன்னதாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) இருந்து அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது. இந்நிலையில், […]
ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவர்களுக்காக பாடங்கள் அனைத்தும் இன்று முதல் ஸ்வயம் பிரபா சேனல் மூலம் ஒளிப்பரப்பப்படவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் அவதிப்படும் மாணவர்களுக்காக ஆப்லைன் வடிவில் பாடங்களை வழங்குவதற்கான முயற்சியை […]
நெட்வொர்க் கிடைக்காததால் மலையில் குடில் அமைத்து படித்த மாணவிக்கு பிரதமர் சிறுமியின் வீட்டில் இணையவசதி வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னாலி. இவர் கோபிநாத் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்வப்னாலி வசிக்கும் இடத்தில் செல்போன் நெட்வொர்க் இல்லாத காரணத்தால் அவர் அருகிலுள்ள மலையில் செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்தில் குடில் அமைத்து […]
ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகளை தனியார் பள்ளிகளில் எப்படி பின்பற்றப்படுகிறது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பல வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசு வழங்கிய நிலையில், ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகளை தனியார் பள்ளிகளில் எப்படி […]
ஆன்லைன் வகுப்பில் எடுக்கும் பாடங்கள் புரியாததால் படிக்காமல் இருந்த 10ம் வகுப்பு மாணவனை ஆசிரியரும், பெற்றோரும் திட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனியில் ஆண்டிப்பட்டியில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மகன் அபிஷேக். இவர் திண்டுக்கல் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் . […]
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்தபோது, ஆன்லைன் கல்வி தொடர்பாக தமிழக அரசின் வழிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்றும் என […]
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் விற்பனை தடை செய்யவும், ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் […]
கர்நாடகாவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும், மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் 2020-2021-ம் ஆண்டுக்கான பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவிலும் இந்த வகுப்புகள் நடைபெற்று வருகிற நிலையில், சிறுவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் முன்பாக அதிக நேரம் அமர்ந்திருப்பது, அவர்களுக்கு உடல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படும் என குற்றசாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து பெங்களூரில் உள்ள மனநல மற்றும் […]
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி சரண்யா தொடர்ந்த வழக்கை ஜூன் 20-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகள் வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும், ஏழை மாணவர்களுக்கு சாத்தியம் இல்லை என பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் […]
ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இயலாத காரணத்தால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி தேவிகா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரசின் தீவிர பரவலால், இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில், கடந்த திங்கட்கிழமை பர்ஸ்ட் பெல் என்ற ஆன்லைன் வகுப்பறை திட்டத்தின் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் […]