ராமேஸ்வரம் கஃபே.! குற்றவாளியை பிடிக்க துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்.!

Ramewshwaran Cafe - NIA Reward 10 lakhs

Rameshwaram Cafe – கடந்த வார வெள்ளிக்கிழமை (மார்ச் 1) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

Read More – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்.!

முதலில் இந்த வழக்கை பெங்களூரு உள்ளூரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதன் பிறகு , பெங்களூரு குற்றவியல் பிரிவினர் வழக்கை விசாரிக்க தொடங்கினர். பின்னர் தான், இந்த வழக்கு விசாரணையானது தீவிரவாத நடவடிக்கைளை கண்காணிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான NIAவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

வெடிகுண்டு வெடித்த சிசிடிவி காட்சிகள், உணவாகத்தின் வெளியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதில், ஒரு தொப்பி , கண்ணாடி அணிந்த ஒரு நபர் கர்நாடக அரசு பேருந்து மூலம் உணவகத்திற்கு வந்தது, பின்னர் அங்கு இருந்து வெளியே சென்று பேருந்தில் ஏறி சென்றது. வரும் போது இருந்த பை போகும்போது இல்லாமல் இருந்தது ஆகியவற்றை கொண்டு சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டது.

Read More – பரபரப்பு…கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

இந்த புகைப்படத்தை தேசிய புலனாய்வு பிரிவினர் வெளியிட்டு, இவரை பற்றி தகவல் தெரிந்து கூறினால் 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்கும் நபரின் அடையாளம் பாதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்