பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. கண்ணீரை பார்க்க காங்கிரசுக்கு நேரமில்லை.. பிரதமர் கடும் குற்றசாட்டு.!

PM Modi says about Rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் (நவம்பர் 25) 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மாநில ஆட்சி பொறுப்பில் காங்கிரஸ் இருக்கிறது. எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது.

இதனால் ராஜஸ்தான் மாநிலத்திலும் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று அந்தா, பாரனில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

ராஜஸ்தான் தேர்தல்: 500 ரூபாய்க்கு சிலிண்டர், 2 லட்சம் வட்டியில்லா கடன்! வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

அப்போது மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில்  ராஜஸ்தான் மக்களுடன் பாஜக எப்போதும் சிறப்பான உறவைக் கொண்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இப்போது தான் ‘வளர்ந்த நாடு’ என இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றுள்ளோம்.

வளர்ந்த இந்தியாய்வில் ராஜஸ்தானின் வளர்ச்சியை சேர்க்காமல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முழுமையடையாது. ஆனால், நமது நாட்டின் மூன்று எதிரிகளான ஊழல், வாரிசு அரசியல், தீமையுடன் துணை நிற்றல் ஆகிய மூன்றும் இருக்கும் வரை, வளர்ந்த இந்தியா நோக்கம் ராஜஸ்தானில் நிறைவேறுவது கடினம். காங்கிரஸின் மிகப்பெரிய சின்னமே . மேற்கண்ட இந்த மூன்று தீமைகள் தான்.

ராஜஸ்தானின் “ரெட் டைரி” பற்றி பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்த “சிவப்பு டைரி”யின் பக்கங்களை புரட்டும்போது, முதல்வர் முகம் வாடுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் உங்கள் தண்ணீரை, காடுகளை, நிலங்களை காங்கிரஸ் அரசு எப்படி விற்றது என்பதை இந்த “சிவப்பு டைரி” தெளிவாகக் கூறிவிடும்.

காங்கிரஸில் – அமைச்சர்கள் , எம்எல்ஏக்களால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள பொதுமக்களை கொள்ளையர்கள், கலவரக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் காங்கிரஸ் அரசு ஒப்படைத்துள்ளது.

காங்கிரஸின் ஆதரவுடன் சமூக விரோத சக்திகளின் ஆதிக்கம் ராஜஸ்தானில் அதிகமாக உள்ளது. ஜாலவாரில் தலித் இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாடு முழுவதும் உள்ள மக்கள் அறிவர்.

சாப்ரா கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதல்வர் இல்லத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு இருக்கிறது. கலவரக்காரர்கள் தவிர, காங்கிரஸ் அமைச்சர்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இங்கு, முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்கள் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

ராஜஸ்தானின் பெண்கள் அம்மாநில அரசிடம் பாதுகாப்பு கேட்டபோது, பொய்யாக குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என அம்மாநில அரசு கூறுகிறது. பெண்களின் கண்ணீரைப் பார்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு நேரமில்லை எனவும் ராஜஸ்தானில் அளவும் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரதமர் மோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்