ஹரியானா : ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலேயே பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்தது. இதில், ஹரியானா மாநிலத்தில் பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை கைப்பற்ற இருகட்சிகளுக்கும் இடையே […]
டெல்லி: ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 8ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விழாவில் அவருக்கு விருது வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். Mithun Da’s remarkable cinematic journey inspires generations! Honoured […]
கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பாப்பம்மாள் 100 வயதைக் கடந்தும் விவசாயம் செய்து வந்தார். இதற்காக, இவருக்கு 2021-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, பாப்பம்மாளின் காலில் விழுந்து பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர், தான் விவசாயம் கற்ற […]
சென்னை : தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கொடுக்காமலும், அனுமதி வழங்காமலும் மத்திய அரசு இருந்து வருவதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே விடுவிக்க முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். அதன்படி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சற்று முன் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். டெல்லிக்கு செல்லும் ஸ்டாலின், நாளை காலை 11 மணிக்கு பிரதமரை நாளை சந்திக்கவுள்ளார். அப்போது தமிழக திட்டங்கள் […]
மகாராஷ்டிரா : மும்பையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றும் கனமழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நேற்று மாலை வெறும் மூன்று மணி நேரத்தில் 131 மிமீ மழை பெய்த புனேக்கு IMD ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில், புனே மெட்ரோவின் புதிய வழித்தடத்தையும், நகரின் பிற வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவிருந்தார். தொடர் கனமழை காரணமாக மோடியின் […]
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதிபர் ஜோ பைடன் தலைமையில் […]
டெல்லி : விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. சந்திரயான் 3-ஐ தொடர்ந்து, இஸ்ரோ நிலவில் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை மேற்கொள்ள சந்திரயான்-4 விண்கலம் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின், பூமிக்கு மீண்டும் வருவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிரூபிப்பதற்காகவும் சந்திரயான்-4 என பெயரிடப்பட்ட இரண்டு முக்கிய விண்வெளிப் பயணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. நிலவில் இருந்து பாறைகள் மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு […]
புதுடெல்லி : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டை ஒட்டி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே செல்கிறார். இதன்மூலம் புரூனே செல்லும் முதல் இந்தியத் தலைவர் எனும் பெருமையை மோடி பெறுகிறார். புருனே பயணத்தின் போது, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மசூம்தார், புருனேயுடனான உறவுகள் குறித்து பிரதமர் […]
சென்னை : நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணர் பக்தர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி எனப்படும் இந்த பண்டிகை, திருஷ்டி பூஜையில் பகவான் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். இந்நன்னாளில் பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். பிரதமர் மோடி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள […]
உக்ரைன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி. போலாந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைனுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர். இதன் மூலம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, உக்ரைன் சென்றுள்ள இந்திய பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் மோடி. அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ள நிலையில், கீவ் நகரம் மீது ரஷ்யா இதுவரை எந்த தாக்குதலும் […]
உக்ரைன் : அரசுமுறை பயணமாக “டிரைன் ஃபோர்ஸ் ஒன்” என்று அழைக்கப்படும் ரயில் மூலம் உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று, போலாந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைனுக்கு பயணத்தை தொடங்கினார். அவர், “டிரைன் ஃபோர்ஸ் ஒன்” என்று அழைக்கப்படும் ரயில் மூலம் உக்ரைனுக்கு சென்றடைந்தார். ரஷ்யா- உக்ரைன் மோதல் காரணமாக உக்ரைனில் உள்ள அனைத்து விமான […]
டெல்லி : உலகத் தலைவர்கள் பயன்படுத்தும் சொகுசு ரயில் சேவையான உக்ரைனின் ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன்னில் மோடி பயணம் மேகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ரஷ்யா – உக்ரைன் […]
டெல்லி : இந்தியாவில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் பிரதமர் மோடி தனது உரையில், ” 75,000 புதிய மருத்துவ படிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் செக்யூலர் சிபில் கோட், பங்களாதேஷ் இந்துக்கள் பாதுகாப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியின் முதல் […]
டெல்லி : நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் வேதனை தருகிறது என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் கூறி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 31 வயது பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்கம் மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் பெரும் போராட்டங்கள் நடந்த வரும் நிலையில், இன்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இந்த […]
டெல்லி : செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 10 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெற்றுள்ளார். 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக இந்திய தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பில் உள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்து கொண்டார். கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி […]
டெல்லி : 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிய பின், நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார. நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தியதை, தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையை சென்றடைந்தார். அங்கு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, நமது நாட்டின் […]
உக்ரைன் : ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்லவுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உக்ரைன் மீது 2022இல் ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் 2 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இந்தியா தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்துகின்றனர். சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி […]
டெல்லி : கடந்த 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை நீக்கி அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் RSS-ல் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மோடி அரசு விலக்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் மத்திய ஊழியர்கள் பங்கேற்க 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது […]
டெல்லி : ரஷ்யா, ஆஸ்திரியா என பிரதமர் மோடி தனது மூன்று நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, டெல்லி வந்தடைந்தார். 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு முதன்முதலில் சென்றார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பல விவகாரம் குறித்து பேசினார். இதை அடுத்து, அங்கு இருந்து ஆஸ்திரியாவுக்கு சென்று அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆஸ்திரியவாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர், […]
சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. தற்பொழுது, பிரதமர் 20-ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆம், 20-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார். அதாவது, சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – […]