வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம்: ராகுல் காந்திக்கு கர்நாடகா தேர்தல் ஆணையர் நோட்டீஸ்.!

பெங்களூருவில் வாக்குத்திருட்டு நடந்திருப்பதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு கர்நாடக தலைமை தேர்தல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Rahul Gandhi

கர்நாடகா :மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் இரட்டை வாக்குப்பதிவு செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த புகாருக்கு ஆதாரம் கோரி கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி, இப்பொது அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி, ராகுல் காந்திக்கு முறையான நோட்டீஸ் அனுப்பி, போலி வாக்களித்ததாக அவர் செய்த குற்றச்சாட்டை ஆதரிக்கும் ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆகஸ்ட் 7ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 11,965 போலி வாக்காளர்கள், 40,009 தவறான முகவரிகள், 10,452 ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்கள் மற்றும் 33,692 படிவம் 6 தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்

இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்கனவே ராகுல் காந்தியின் கூற்றுக்களை முறையாக நிரூபிக்க வேண்டும் அல்லது “தவறான குற்றச்சாட்டுகள்” என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன் சரிபார்ப்பு செயல்முறைகளில் அத்தகைய முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த நோட்டீஸில், ”ராகுல் வழங்கும் ஆவணங்கள் மூலம் கர்நாடக தேர்தல் ஆணையம் விரிவான விசாரணையை மேற்கொள்ளும். சகுன் ராணி போன்று வேறு யாராவது 2 முறை வாக்களித்துள்ளதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node