Congress: வருமான வரி விவகாரம் தொடர்பாக நாளை நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், வருமான வரி கணக்கை முறையாக செலுத்தாத கட்சிகளுக்கு வருமான வரித்துறை அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி வருகிறது. அந்தவகையில், காங்கிரஸிடம் சுமார் ரூ.1,800 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. […]
Congress: காங்கிரஸ் கட்சியிடம் ரூ.1,700 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் கடந்த 2018-19ம் நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டங்களை தெரிவித்தனர். அதேசமயம் வங்கி கணக்குகள் முடக்கம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில், இந்திய அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பான மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா உடனான கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் பாரதிய ஜனதாவுடன் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமான ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் 9வது முறையாக முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். அவருக்கு […]
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவரை மின்கம்பத்தில் நிர்வாணப்படுத்தி கட்டி வைத்து தாக்குதல் நடத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டின் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவரும் சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த இளம் பெண்ணின் […]
பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அந்தவகையில் ராஜஸ்தானில் நேற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, பாஜகவை கடுமையாக தாக்கி பேசிய ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தார். இதில், […]
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், கட்சியின் பெயர், கொடி பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து தலைமை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் நோட்டீஸ். தமிழ்நாட்டுக்கு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 22க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றசாட்டியுள்ளார். அதன்படி, நீட் விலக்கு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளிட்ட 22 மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என தனது நோட்டீஸில் […]
கலை பண்பாட்டுத்துறை வழங்கும் “நம்ம ஊரு திருவிழா”வில் பங்கேற்க விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு. 2022-2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலை விழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை […]
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து கல்லூரிகள் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு இல்லை என்றும்,மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு அதில் 225 கல்லூரிகளுக்கு இத்தகைய உத்தரவை அண்ணா […]
குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து. சென்னை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கோயில் நிலத்தில் குயின்ஸ்லேண்ட் பூங்கா இருப்பதாக கூறி, இதனை காலி செய்யுமாறு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுதொடர்பாக குயின்ஸ்லேண்ட் நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூங்கா அமைத்துள்ள இடம் தொடர்பான நில விவகாரம் விசாரணை, நில […]
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ். டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இணைய வழியாக செயல்பட கூடிய (E-commerce) நிறுவனங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்த பணிகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் உணவு டெலிவரி செய்யக்கூடிய E-commerce நிறுவனங்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் […]
விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கில் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்குதொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் விக்னேஷ் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்தில் அறிக்கை […]
சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ். சென்னையில் வளசரவாக்கம் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 7 வயது மாணவன் உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 கேள்விகளுக்கு 2 நாட்களில் விளக்கமளிக்க பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ்க்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவன் தீக்சித் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கு அனுப்பிய நோட்டீசை சுட்டிக்காட்டி வளசரவாக்கம் காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு […]
டெல்லியில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய புகைப்படங்களை ராகுல் காந்தி டுவிட்டரில் பகிர்ந்ததால் ட்விட்டருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி தலித் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும், சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக மயானத்தின் பூசாரி மற்றும் 3 பேர் […]
“அதிமுகவில் இருந்து யாரையும் நீக்க ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை” என சசிகலா ஆதரவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இதனால் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் அதிமுக தொண்டர்களை கட்சி தலைமையில் இருந்து நீக்கி வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து சசிகலா அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் தொலைப்பேசியில் பேசி வருகிறார். இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டுவது […]
டெல்லியில் போலீஸ் உடையில் டூயட் பாட்டிற்கு இரண்டு காவல் துறையினர் நடனமாடியிருப்பது குறித்து விளக்கம் கேட்டு உயர் அதிகாரி உஷா ரங்கானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். டெல்லி மாடல் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக சஷி என்பவரும், அதே காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக விவேக் மாத்தூர் என்பவரும் பணிபுரிகின்றனர். சஷி மற்றும் விவேக் இருவரும் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருவரும் காவல் நிலையத்தில் பணிபுரியும் நேரத்தில் காவல் உடையோடு ஆடல் பாடல் […]
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு மீது ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 16-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆடிட்டர் குருமூர்த்திக்கு தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி குறித்த விண்ணப்பத்தின் விசாணைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகள் பற்றிய குருமூர்த்தி பேச்சு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் துரைசாமி விண்ணப்பித்திருந்தார். துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக […]
பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன்கள் மீதான வட்டியை 0.25% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து SBI வங்கி ₹75 லட்சத்திற்கு மேல் வீட்டுக்கடன் பெறுவோர்களுக்கு 0.25% வட்டி தள்ளுபட்டி பெறலாம் என்றும் கடன் கேட்பவரின் சிபில் மதிப்பெண்களுக்கு தக்க இவ்வட்டி தள்ளுபடி சலுகையானது வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் யோனோ செயலி மூலமாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் அனைத்து வீட்டுக்கடன்களுக்கும் கூடுதலாக 0.05% வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
உத்தரவை மீறி கடன் தவணை பெரும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு. கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடன் தவணை செலுத்த கூடிய கால அவகாசம் ஆகஸ்டு இறுதி வரை ரிசர்வ் வங்கியில் உள்ள போதும் அதை சில வங்கிகள் நடைமுறைப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார். வாங்கி கணக்கிலுள்ள பணத்தை ஒப்புதலின்றி பிடித்துக்கொள்வதாகவும், கடனை திருப்பி செலுத்த கோரி வங்கிகளும் நிதி […]
எந்தவொரு காரணமும் இன்றி மதுரை மாவட்டத்தில் மூடப்பட்ட 120 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மதுரை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளது. தற்போது இந்த மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்ற உத்தரவு இருக்கின்ற பொழுது மதுரை மாவட்டத்தில் சுமார் 120 தனியார் மருத்துவமனைகள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மூடப்பட்ட மருத்துவமனைகளுக்கு எல்லாம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் வினய் நோட்டீஸ் […]