தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே வரும் பிப்ரவரி 15ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால் 3 பேர் கொண்ட தேர்தல் குழுவில் ஒரு பதவி காலியாக உள்ளது. அனுப் சந்திர பாண்டேவுக்கு பதிலாக புதிய தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான முதல் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023ன் கீழ் இந்த கூட்டம் […]
இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தன்னை தேர்தல் ஆணையர் பதிவில் இருந்து விடுவிக்கும்படி தெரிவித்துள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாலா நியமனம் செய்யப்பட்டதையடுத்து, தேர்தல் ஆணைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவருக்கு கீழ், ஆறு துணைத் தலைவர்கள் அடங்கிய நிர்வாகக் […]
மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தற்போது தமிழகத்தை பொருத்தவரை ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது.அதன் மீதான பரிசீலனையும் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக தலைமை […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஒ.பி ராவத்தின் பதவி இன்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற சுனில் அரோராவிற்கு தேர்தல் ஆணையர்கள் தங்களது வாழ்த்துத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மெட்ரோ குடிநீர் தலைமை அதிகாரியாக பணிபுரியும் சத்தியப்ரதா சாஹு தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இச்செய்தியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கோனிக்கு பதிலாக இவர் பொறுப்பேற்கவுள்ளார்.மேலும், இவரை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதை அடுத்து ராஜேஷ் லைக்கோனிக்கு மாநில தலைமை செயலாளர் பதவி வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளையும் வெளியிட தேர்தல் ஆணையம் தடை.அதேபோன்று சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.வேட்பாளருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குறுஞ்செய்தி வெளியிட்டாலும் நடவடிக்கை என பல கட்டுபாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.