வேகமாக நிலவில் தரையிறங்கியதா லேண்டர்?! இன்னும் சமிக்கை வராதது ஏன்?!

லேண்டர் தரையிறங்குவதில் சிக்கல். நிலவின் தரைக்கு 400மீ உயரத்தில் இருக்கும் போது, லேண்டர் வேகமாக விழுந்ததாகவும், அதனால் லேண்டரின் சில பகுதிகள் நொறுங்கியதாகவும், அதனால் லேண்டரில் இருந்து செயற்கைகொள் கட்டுப்பாட்டு அறைக்கு இன்னும் லேண்டரில் இருந்து சிக்கனல்கள் வரவில்லை என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலவில் இருந்து 2.1 தூரத்தில் இருக்கும் போதே விக்ரமிடம் இருந்து சிக்னல்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதனால் பெங்களூரு, இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுப்பாட்டு அறையில் லேண்டர் தரையிறங்குவதை பார்த்து கொண்டிருந்த பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்ரோ தலைவர் சிவன், ‘ இன்னும் லேண்டரில் இருந்து சிக்னல் வரவில்லை. யாரும் நம்பிக்கையை தளரவிட வேண்டாம். ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சிஞாளுக்க்காக காத்திருக்கின்றனர்.’ என தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி பேசுகையில், ‘ நம்பிக்கையை இழக்க வேண்டாம். தைரியமாக இருங்கள்.’ என கூறிவிட்டு சென்றுவிட்டார்
நமக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது. லேண்டர் வேறு இடத்தில் தரையிறங்கி, இருந்தால் அதிலிருந்து பிரக்யான் வெளிவந்திருக்கும். பிரக்யான் தகவல்களை, சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் விக்ரம் லேண்டர் தேவை என்பதால், அதனை விக்ரம் லேண்டர் செய்யாத பட்சத்தில், 5.30 மணி அளவில் நீள்வட்டப்பாதையில் ஆர்பிட்டர் வரும்போது பிரக்யான் தனக்கு கிடைத்த தகவல்களை ஆர்பிட்டரின் மூலம் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு தரும் என அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025