இழுபறியில் ஹரியானா! பாஜக கூட்டணி ஆட்சியா? காங்கிரஸ் கூட்டணி ஆட்சியா?!

கடந்த 21ஆம் தேதி ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதன் ரிசல்ட் தற்போது வந்துகொண்டிருக்கிறது.இதில் மஹாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதானால் அங்கு பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றியை உறுதி செய்து வருகிறது.
ஆனால் ஹரியானாவில் உள்ள 90சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 89 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன அதில் ஆட்சியமைக்க 49 தொகுதிகள் பெரும்பான்மை பெற வேண்டிய சூழலில்,
பாஜக 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஜனாயக் ஜனதா தளம் 10 தொகுதிகளிலும், சுயேச்சை 6 தொகுதிகளிலும் மற்றவை 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவதால், கூட்டணிக்காக இரு பிரதான கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025