பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது ஏற்பட்ட காதலால் சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது..!
பாதுகாப்பு படையில் சீனியர் கமாண்டென்ட் ஆக உள்ளவர் ரஞ்சன்பிரதாப் சிங். இவர் 20 வருடங்களுக்கு முன் சிவில் சர்வீஸ் தேர்வு தயாராகும்போது ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அப்பெண்ணுடன் உத்தரகாண்டில் உள்ள ஒரு ஐஏஎஸ் பயிற்சி அகாடமியில் நான்கு மாதம் பயிற்சி வகுப்பு அவருடன் சென்று உள்ளார்.அப்போது அப்பெண் மீது ரஞ்சன் பிரதாப் சிங்கிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அப்பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.இதனால் பிரதாப் சிங்கிற்கு மனவருத்தம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அப்பெண் பிரதாப் சிங் உடன் நட்பாக பேசி வந்தார். சமீபத்தில் அப்பெண் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதனால் கோபமடைந்த பிரதாப்சிங் அவரை பழிவாங்க வேண்டுமென நினைத்தார். அதன்படி அப்பெண்ணின் கணவர் காரில் பிரதாப் சிங் போதை பொருள்களை பதுக்கி வைத்து விட்டு சிஐஎஸ்.எஃப் அதிகாரியிடம் தகவல் கொடுத்து விட்டார்.இதனை தொடர்ந்து சிஐஎஸ்.எஃப் அதிகாரிகள் காரில் சோதனை செய்தனர். அதில் போதைப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
அதிகாரிகளுக்கு அப்போது ஒரு சந்தேகம் எழுந்தது. போதை பொருள் கடத்துபவர் என்றால் எப்படி அவர் காரிலே மூன்று இடத்தில் போதை பொருள்களை வைப்பார். மேலும் தகவல் முதலில் டெல்லி காவல்துறைக்கு செல்லாமல் எப்படி நேரடியாக சிஐஎஸ்.எஃப் அதிகாரிக்கு வந்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் தகவல் கொடுக்கப்பட்ட கைபேசி எண்ணை வைத்து விசாரித்தனர். அதில் பெட்ரோல் பங்கில் புரியும் ஒருவரிடம் செல்போன் நம்பர். அவரிடம் விசாரித்த போது என்னிடம் இருவர் வந்து அவசரமாக செல்போனை கேட்டார்கள். ஒரு கால் பேச வேண்டும் என கேட்டதால் அவர்களுக்கு செல்போனை கொடுத்தேன் என கூறினார்.
உடனே பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சீனியர் சீனியர் கமாண்டென்ட் ரஞ்சன் பிரதாப் இருந்தது தெரியவந்தது.இதை தொடர்ந்து ரஞ்சன் பிரதாப்பிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார்.பின்னர் போதைப் பொருள்கள் வாங்கி கொடுத்த அவரது நண்பரையும் கைது செய்தனர்.பிரதாப் சிங் தற்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பாதுகாப்பிற்கான இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.