ஓடையில் வாகன விபத்து: 7 பேர் உயிரிழப்பு, ஒருவர் காயம் – பிரதமர் மோடி இரங்கல்

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்ட ஓடையில் வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு, ஒரு காயமடைந்தார்.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்ட ஓடையில் வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு, ஒரு காயமடைந்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் புல்கிரத் பகுதிக்கு அருகிலுள்ள சுகேதி காட் நீர் ஓடையில் வாகனம் கீழே விழுந்ததில் வாகனத்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த சாலை விபத்து குறித்து வருத்தம் தெரிவித்து இந்தியில் ட்வீட் செய்துள்ளார், “இமாச்சல பிரதேசத்தில் மண்டியில் சாலை விபத்து நடந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தார். மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

unknown node