இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகியுள்ளன. இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டபேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தேர்தல், இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் இமாச்சல பிரதேச தேர்தலில், […]
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 4% வாக்குகள் மட்டுமே பதிவு என தேர்தல் ஆணையம் அறிவிப்பு. இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் மாதம் 12-ஆம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்ட பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் […]
இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி தனது 106வது வயதில் காலமானார். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் சரண் நேகி (வயது 106) உடலனல குறைவால் காலமானார். இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூரில் வசிக்கும் நேகி, வரவிருக்கும் நவ.12ல் ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக நவம்பர் 2-ஆம் தேதி தபால் மூலம் வாக்களித்திருந்தார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷியாம் சரண் நேகி இல்லத்துக்குச் சென்று […]
குஜராத், இமாச்சலப்பிரதேச மாநில தேர்தலுக்கான தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று வெளியிட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் தேதி அட்டவணையை டெல்லியில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகள், இமாச்சலில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இரு மாநிலங்களுக்கும் […]
இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இமாச்சல பிரதேசம் முதல் புது டெல்லி வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மிகவும் இலகுவான, அதிநவீன வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் அதிகவேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில் புதன் கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற […]
ஹிமாச்சல பிரதேசத்தில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் சிக்கிய நிலையில், மீட்பு பணி தீவிரம். ஹிமாச்சல பிரதேசம் சோலன் மாவட்டத்தில் பர்வானூ டிம்பர் டிரெயிலில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் சிக்கிய நிலையில், மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தரத்தில் தொங்கும் ரோப் காரில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேர் இன்னும் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் NDRF குழு […]
இமாச்சல பிரதேசம் மண்டி பகுதியில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று மாலை 6.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை இறுதிப் போட்டியில் VJD முறையில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் கூட்டணி அமைத்த தினேஷ் கார்த்திக், இந்தரஜித் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். இந்த […]
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்ட ஓடையில் வாகனம் கவிழ்ந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு, ஒரு காயமடைந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தின் புல்கிரத் பகுதிக்கு அருகிலுள்ள சுகேதி காட் நீர் ஓடையில் வாகனம் கீழே விழுந்ததில் வாகனத்தில் இருந்த 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த சாலை விபத்து குறித்து வருத்தம் தெரிவித்து இந்தியில் ட்வீட் செய்துள்ளார், “இமாச்சல பிரதேசத்தில் மண்டியில் […]
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 21 திங்கள் முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மீண்டும் திறக்க இமாச்சலப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முடிவு நேற்று மாலை முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,மத்திய அமைச்சகத்தின் நிலையான நேர்முறைகளின் படி, செப்டம்பர் 21 முதல் […]
ஹிமாச்சல பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாகூர் முதல்வராக உள்ளார். இந்நிலையில், நேற்று இமாச்சல பிரதேச முதல்வரின் ஐந்து பாதுகாப்பு காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை சிம்லாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுரேகா சோப்ரா தெரிவித்தார்.