இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலி..எண்ணிக்கை 124 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்த நிலையில்,

இந்தியாவில் கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 124 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 லிருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 353 பேர் வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் :

மாநிலங்கள்

பாதிப்பு

குணமடைந்தவர்கள்

உயிரிழப்பு

மகாராஷ்டிரா

868

56

48

தமிழ்நாடு

690

19

07

டெல்லி

576

21

07

தெலுங்கானா

364

35

07

கேரளா

327

58

02

உபி

305

21

03

ராஜஸ்தான்

288

21

03

ஆந்திரா

266

01

03

மத்திய பிரதேசம்

229

0

13