இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 17,092 ஆக பதிவாகியுள்ளது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 17,092 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,09,568 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,168 பேர் ஆக உள்ளது. அதைப்போல,கடந்த ஒரே […]
இந்தியா முழுவதும் கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, ஓமைக்ரான் பரவல் அதிகமாக பரவி வந்தது. இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மார்ச் 27-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 607 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,25,58,530 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 7,571 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,25,58,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 607 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் […]
கொரோனா மேலும் பரவாமல் இருக்க புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு, அனைத்து தனிக்கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, புகையிலை போன்ற பொருட்கள் மூலம் பரவ […]
மகாராஷ்டிரா : ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 11,506ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 35,365 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 9065 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1152 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று(மே 1) ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 1008 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]
ஜபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியை விட்டுப் போகமாட்டேன் விராட் கோலி அறிவிப்பு. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. […]
மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் 20 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக அத்திக்கரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையி பாதிக்கப்பட்டவர்களை கடற்படை தளத்தில் உள்ள […]
தமிழகத்தில் இன்று மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஏற்கனவே கொரோனாவால் 690 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 738 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக தேனியில் இன்று மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 23 பேர் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் திமுக எம்.பி.யும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் சூழலில் புதிய நாடாளுமன்றம் தேவையா? என பிரதமரிடம் கேட்டேன் என தெரிவித்தார். இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, உள்ளிட்டோர் மக்கள் […]
அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் துரித நடவடிக்கைகள் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தியாவசிய கையிருப்புகள் கட்டாயம் நீங்கள் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு காலம் நீடிக்கபடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு கடிதம் பெரும் முக்கியத்துவம் […]
இந்தியாவில் கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனாவால் 114 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 124 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 லிருந்து 4,789 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 353 பேர் வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் : மாநிலங்கள் பாதிப்பு குணமடைந்தவர்கள் உயிரிழப்பு மகாராஷ்டிரா 868 56 48 தமிழ்நாடு 690 […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுறது. மேலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவும், நோய் மேற்கொண்டு பரவுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முடக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, விருப்பம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்கலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதேபோல மத்திய அரசு சார்பில் பிரதமர் நிவாரண […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுந்தியுள்ளார். அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் எம்.பி.க்களின் சம்பளத்தை 30% குறைக்கும் அமைச்சரவையின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சோனியா காந்தி வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தேவையான […]
கொரோனா குறித்த வதந்தியை தடுக்க வாட்ஸ் அப்பில் தகவல்களை பகிர்வதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில், இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உள்ள பல்வேறு குழுக்களில் அதிகம் முறை பகிரப்படும் தகவல்களுக்கு மட்டும் இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு குறித்து சமீபத்தில் வாட்ஸ் […]
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு 621, டெல்லி 503, தெலுங்கானா 321, கேரளா 314, உத்தரபிரதேசம் 305 ஆகிய மாநிலங்களில் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் புதிதாக 120 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 748 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதித்தவர்கள் எண்ணிக்கை 868 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 லிருந்து 4281 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 லிருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4281 பேரில் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் இந்தியாவில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு 621, டெல்லி 523, தெலுங்கானா 321, கேரளா 314, உத்தரபிரதேசம் 305 போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகம் தாக்கப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் தொடங்கிய கொரோனா […]
டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 503 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 523 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கூறியுள்ளார். இதனையடுத்து கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆக உள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Cases in Delhi have increased, partly due to […]
தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 571 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 621 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 50 பேரில் 48 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றும் 2 பேர் சென்னையை சேர்த்தவர்கள் என தெரிவித்துள்ளார். இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயதுடைய […]
கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரதமர் மோடியின் வலியுறுத்தல்படி, நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் நேற்று சரியாக இரவு 9 மணி அளவில் 9 நிமிடங்கள் வீட்டு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்குகளை ஏற்றினர். தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மின்வாரியம் மேற்கொண்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட நேர இடைவெளியில் 1,200 மெகாவாட் மின்சாரம் குறையும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்திருந்தது என […]
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பின்னர் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லுரிகள் உள்ளிட்ட அனைத்தையும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லுகளில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் […]