ஆந்திரா சட்டமன்ற தேர்தல்: கடும் சரிவை தொடர்ந்து சோகத்துடன் வெளியேறிய ரோஜா.!
ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், தெலுங்குதேசம் கூட்டணி 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளது
இந்த நிலையில், அங்கு நகரி சட்டமன்ற தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை விட சுமார், 40687 வாக்குகள் பின்தங்கிய நிலையில், YSRCP வேட்பாளர் ரோஜா வாடிய முகத்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார்.
தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலி பானு பிரகாஷ் 96893 வாக்குகளை பெற்று 40687 வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.