6 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள்..  பிரதர் மோடி தகவல்.!

PM Modi

சென்னை:  கடந்த 6,7 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என பிரதர் மோடி பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிகட்டத்தை எட்டி வருவதால் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும் முன்பை விட தற்போது தீவிரமடைந்து உள்ளது. பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் எதிர்கட்சிகள் மீதான விமர்சனங்கள் குறித்தும் பேசுவது போல , தனியார் ஊடகங்களிலும் பேட்டிகள் வாயிலாக தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. தனியார் செய்தி நிறுவனமான … Read more

சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை… பிரதமர் மோடி பேட்டி.!

PM Modi Election Campaign

சென்னை: பாஜக என்றுமே சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மக்களவைத் தேர்தல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்று, இன்று 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக 8 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், பாஜக சிறுபான்மையினருக்கு … Read more

5ஆம் கட்ட தேர்தல் நிலவரம்.! இதுவரை 10.28 சதவீதம் வாக்குப்பதிவு.!

Election Voting

சென்னை:  5ஆம் கட்ட வாக்குபதிவில் 9 மணி வரையில் 10.28 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 தொகுதிகளுக்குமான தேர்தல் 4 கட்டங்களில் நிறைவுபெற்ற நிலையில் இன்று (மே 20) 5ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேசம்(14), பீகார்(5), ஜம்மு காஷ்மீர்(1), ஜார்கண்ட்(3), லடாக்(1), மகாராஷ்டிரா(13),ஒடிசா (5), மேற்கு வங்கம் (7) ஆகிய மாநிலங்களில் 49 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே … Read more

5ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 8 மாநிலங்கள், 49 தொகுதிகள்…

5th Phase Election

சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நாளை (மே 20), 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நாளை (மே 20), 5ஆம் கட்ட தேர்தலானது 8 மாநிலங்களில் மொத்தம் 49 தொகுதிகளில் மட்டும் நடைபெறுகிறது. வழக்கம்போல, நாளை காலை 7 மணிக்கு … Read more

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

5th phase election

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49 தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி 5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும்  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதுவரை நடைபெற்ற 4 கட்ட மக்களவைத் தேர்தலில் 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், நான்காம் கட்ட தேர்தல் முடிவடைந்து, உத்தரப் பிரதேசம், … Read more

பிரதமரின் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்யும்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

Tamilnadu CM MK Stalin

சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில் 4 கட்ட மக்களவை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. தென்மாநிலங்களில் தேர்தல்கள்  நிறைவுபெற்றதை அடுத்து, தற்போது வடமாநிலங்களில் அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நிறைவு பெற்றாலும், மாற்றுக்கட்சிகளின் மீதான விமர்சனங்களை அரசியல் தலைவர்கள் முன்வைக்க தவறுவதில்லை. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் செய்லபடுத்தப்பட்டு வரும் இலவச … Read more

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

Narendra Modi,BJP

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரங்களில் அவர் பிரதமர் மோடி குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் பெரும் தாக்கத்தை இதை தேர்தலில் ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா நாட்டில் … Read more

272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

Union Minister Amit shah

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக நடைபெற்று  379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 20, 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், பிரச்சார வேளைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமுள்ள … Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

PM Modi in Election Campaign

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேநதிர மோடி பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்கு ஆபத்து என்றும் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் விடுவார்கள் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், சமாஜ்வாடியும் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் பகவான் ராமர் மீண்டும் கூடாரத்தில் அமர்ந்துவிடுவார். ராமர் கோவிலுக்குள் … Read more

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம்.! அமித்ஷா எச்சரிக்கை.!

Union minister Amit shah

சென்னை: பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா பீகார் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். பீகார் மாநிலம் மதுபானியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், சீதையின் தேசமான இங்கு பசுவதை செய்வதை ஏற்க முடியாது என்றும், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். சீதாதேவி பிறந்த ஊரில் பசுவை கடத்துவது பசுவதை … Read more