ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிப்பதாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் […]
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றுள்ள ஒரு லட்டு விலை 50 ரூபாய். ஒரு மாதத்தில் 1 கோடி லட்டுகளுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது பெரும் […]
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில், விலங்குகளின் கொழுப்பு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுவது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பதாக, குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெளியான ஆய்வக ரிப்போர்ட்டில், திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இந்த தகவல்கள் நாடு […]
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியதை தொடர்ந்து வெளியான ஆய்வக ரிப்போர்ட்டில், திருப்பதி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றி கொழுப்பு ஆகியவை கலந்து இருந்ததாக குறிப்பிடப்பட்டது. இந்த தகவல்கள் நாடு […]
டெல்லி : கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருவதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடத்தத் தேவையான பரிந்துரைகள் தொடர்பான அறிக்கையை இக்குழுவினர் […]
டெல்லி : மத்தியிலும், மாநில சட்டமன்றத்திலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் விதமாக, “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் திட்டத்தை நாட்டில் அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இதே திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கடந்த முறை அதனை முக்கிய வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையாகயில் குறிப்பிட்டது. தேர்தலுக்கு பின்னர் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய […]
ஆந்திரப் பிரதேசம் : ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சத்யவேடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் கோனேட்டி ஆதிமூலம் (Koneti Adimulam). இவர் மீது ஒரு பெண் பாலியல் புகாரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அது தொடர்பாக எனக்கூறி, இணையத்தில் ஒரு சர்ச்சை வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்திகளை பிக் டிவி எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி நிறுவனம் தங்கள் எக்ஸ் வளைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் […]
ஆந்திர பிரதேசம்: கடந்த 2021, நவம்பர் 19ஆம் தேதி ஆந்திர மாநில சட்டசபையில் ஓர் விவாதத்தின் போது. ஆளுங்கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிலர், எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடவின் குடும்பத்தினரை பற்றி தவறாக கூறியதாக கருத்துக்கள் எழுந்தன. இதனை அடுத்து கண்ணீருடன் அப்போது சட்டசபையில் இருந்து வெளியேறினார் சந்திரபாபு நாயுடு. சந்திரபாபு நாயுடு சட்டசபையில் இருந்து வெளியேறும் போது, இனிமேல் இந்த சட்டசபையில் நான் கலந்து கொள்ள மாட்டேன். அவ்வாறு நான் […]
டெல்லி: மக்களவை சபாநாயகர் யார் என்பது குறித்த ஆலோசனையை பாஜக, NDA கூட்டணி கட்சிகளுடன் வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற முக்கிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இன்னும், மக்களவை சபாநாயகர் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் […]
டெல்லி: உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 7 மணி அளவில் இந்தியவின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், நாளை முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இப்படியான சூழலில், NDA கூட்டணியில் முக்கிய கட்சிகளாக இருக்கும் […]
டெல்லி: மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியநிலையாக, இன்று டெல்லியில் NDA கூட்டணி எம்பிக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியின் பெயரை நாடாளுமன்ற குழுத்தலைவர் (பிரதமர்) என்று ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். இதனை […]
டெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணி அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனை அடுத்து, இன்று NDA கூட்டணியில் உள்ள எம்.பிக்கள், தெலுங்கு தேசம் கட்சி தலைவர்சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம், இன்று டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற […]
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் இந்தியாவில் பல்வேறு பரபரப்பான அரசியல் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 2014 , 2019 என கடந்த இரண்டு முறையும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது போல பாஜகவால், இந்த முறை தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. பாஜகவின் NDA கூட்டணியில், மிக முக்கிய அங்கமாக இருக்கும் கட்சிகள், சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் (16 எம்பிக்கள்) , நிதிஷ்குமாரின் ஐக்கிய […]
ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வென்றுள்ளது. பாஜக 8 இடங்களையும், ஜனசேனா 21 இடங்களையும், ஆளும் YSR காங்கிரஸ் 11 இடங்களை யும் வென்று இருந்தது. இந்நிலையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா […]
ஆந்திர பிரதேசம்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 2014, 2019 தேர்தல்களை போல அல்லாமல் இந்த முறை பாஜக கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் 16 இடங்களை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகாரில் 12 இடங்களை கைப்பற்றிய நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை கூட்டணியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாகும். இந்நிலையில் […]
சந்திரபாபு நாயுடு: மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அனைவரது பார்வைகளும் மற்ற மாநில கட்சிகள் பக்கம் திரும்பியுள்ளது. இதில் குறிப்பாக , சந்திரபாபு நாயுடு (தெலுங் தேசம்) மற்றும் நிதிஷ் குமார் (JDU) ஆகியோரின் ஆதரவு பாஜவுக்கா அல்லது மாற்று கூட்டணிக்காக என்ற கேள்வி எழுந்தது. இந்தசூழலில், இன்று ஆந்திர பிரதேசம் அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். அதில், மக்களவை தேர்தலில் 16 இடங்களை பெற்றுள்ளது […]
NDA கூட்டணி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. பாஜக 240 தொகுதிகளையும், காங்கிரஸ் 99 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இதில் பாஜகவுக்கு கடந்த தேர்தல்கள் போல பெரும்பான்மை வெற்றி கிடைக்கவில்லை. அதனால், பாஜக தலைமையின் கீழ் உள்ள NDA கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. முக்கியமாக, 16 இடங்களை வென்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 இடங்களை பெற்றுள்ள ஐக்கிய […]
ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், தெலுங்குதேசம் கூட்டணி 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளது இந்த நிலையில், அங்கு நகரி சட்டமன்ற தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை விட சுமார், 40687 வாக்குகள் பின்தங்கிய நிலையில், YSRCP வேட்பாளர் ரோஜா வாடிய முகத்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். தெலுங்கு தேசம் […]
ஆந்திர சட்டமன்ற தேர்தல் : இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் முடிவு நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், தெலுங்குதேசம் கூட்டணி 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆனால், ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளது. பெரும்பான்மைக்கு […]
தேர்தல் முடிவுகள்: இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் முடிவு நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன. இதில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி 131 தொகுதிகள் வென்று தனி பெரும்பான்மையுடன் […]