ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், தெலுங்குதேசம் கூட்டணி 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளது இந்த நிலையில், அங்கு நகரி சட்டமன்ற தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை விட சுமார், 40687 வாக்குகள் பின்தங்கிய நிலையில், YSRCP வேட்பாளர் ரோஜா வாடிய முகத்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். தெலுங்கு தேசம் […]
ஆந்திர சட்டமன்ற தேர்தல் : இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் முடிவு நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், தெலுங்குதேசம் கூட்டணி 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆனால், ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளது. பெரும்பான்மைக்கு […]
தேர்தல் முடிவுகள்: இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் முடிவு நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன. இதில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி 131 தொகுதிகள் வென்று தனி பெரும்பான்மையுடன் […]
Train Accident: 14 பேரின் உயிரை காவு வாங்கிய ஆந்திர மாநில ரயில் விபத்திற்கு ஓட்டுனர்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்ததே காரணம் என தெரியவந்துள்ளது. கிரிக்கெட் போட்டியை கண்டு களித்ததால் ஏற்பட்ட கவனச் சிதைவே விபத்திற்கான காரணம் என நாட்டின் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். Read More – மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 34 அமைச்சர்கள்! சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று […]
ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்ற அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ் சர்மிளா. அம்மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சவால்விடும் வகையில், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மேலிடம் சர்மிளாவை நியமித்தது. இந்நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசு தீர்க்க கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் சார்பில், சர்மிளா தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. காங்கிரஸ் […]
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தற்போது இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் முக்கிய பிரச்சாரமாக முன்வைத்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி கருத்து ஏதும் கூறாமல் இருந்து வருகிறது. ஏற்கனவே பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அம்மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். அதனை சட்டப்பேரவையில் அண்மையில் வெளியிட்டும் விட்டார். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட […]
திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி கழக நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்ற வழக்கை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு […]
ஆந்திராவில் ரயில் விபத்தால் இதுவரை 18 ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் நேற்றுவரை 9 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது என விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தெரிவித்துள்ளர். மேலும் […]
நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. ரயில் சிக்னல் இல்லாததன் காரணமாக அலமண்டா மற்றும் கண்டகப்பள்ளி ரயிலானது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது விசாகப்பட்டினம் – ராய்காட் பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியது. இந்த விபத்தில் 3 […]
ஆந்திரா ரயில் விபத்தில் உயிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ரயில் பயணிகளின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் நேற்று இரவு 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை […]
ஆந்திரா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ரயில் […]
கண்டகப்பள்ளி ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக […]
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு , அவர் ஆட்சி செய்த காலத்தில், செயல்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 370 கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி கடும் எதிர்ப்புகளுக்கு […]
ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தை சேர்ந்த 22 பேர் உட்பட மொத்தம் 25 பேரை அம்மாநில தடுப்பு பிரிவு காவல்துறை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் அதிகம் இருப்பதால், இதனை வெட்டி பல காலங்களாக கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு, செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி செம்மரம் கடத்தலை தடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் ஆந்திராவில் செம்பரம் கட்டை கடத்துவதாக தடுப்பு […]
ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சல் வழக்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நக்சலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வழக்கறிஞர்கள், புரட்சி எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இயக்க தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி […]
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. நெல்லூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய சாலை கண்காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு […]
கொரோனாவிற்கு பயந்து 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே தாயும், மகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள குய்யேறு கிராமத்தில் தாய்(43) மற்றும் மகள்(21) இருவரும் கடந்த இரு வருடங்களாக கொரோனா பயத்தால் வீட்டிற்குள்ளேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திகொண்டு வாழ்ந்திருக்கின்றனர். இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பெருகிவந்த கொரோனா தொற்று காரணமாக முதல்முறையாக ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டது. கொரோனா பயம் மற்றும் பிற பதற்றம் காரணமாக இருவரும் 2020 முதல் வீட்டிற்குள் இருந்து 2 வருடங்களாக வெளியே வராமல் வாழ்ந்து […]
திருப்பதி கோவில் வளாகத்தில் வெள்ளப் பெருக்கால் தண்ணீர் தேங்கியுள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். வங்கக்கடலில் புதிதாக உருவாகி தற்போது கரையை கடந்துள்ள மாண்டஸ் புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் (நேற்று) வெள்ளிக்கிழமை கனமழை பெய்துள்ளது. இதனால் கோவில் வளாகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளப்பெருக்கால் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக முதியவர்கள் உட்பட பக்தர்கள் தங்களது பயணங்களில் சிரமங்களை எதிர்கொண்டனர், மழையின் காரணமாக தரிசனம் தடைபட்டது. […]
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.டி.பி. நிறுவனருமான ஒய்.எஸ்.சர்மிளா தெலுங்கானாவில் பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, இன்று டிஆர்எஸ் தொண்டர்களால் அவரது கேரவனை தாக்கி எரித்ததாக, கட்சி தொண்டர்கள் கூறியதையடுத்து வாரங்கல் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வாரங்கல் மாவட்டத்தில் ஒய்.எஸ்.சர்மிளாவின் பாதயாத்திரையின் போது இந்த மோதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது. […]
டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள் என ஜெயக்குமார் பேட்டி. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால், ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் மருது அழகுராஜ். அவர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஓ.பி.எஸ் ஈடுபடுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களால் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சக்திகள். இவங்கலாம் வேலைக்கு […]