கஜா புயல் பாதிப்பு ..!வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு ...!பிரபல நடிகர் அதிரடி முடிவு

கஜா புயலால் வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்துள்ளார்  நடிகர் ராகவா லாரன்ஸ்.

கஜா புயலால் வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்துள்ளார்  நடிகர் ராகவா லாரன்ஸ்.

unknown node

கஜா புயலினால் டெல்டா பகுதி மக்கள் முன்பில்லாதா அளவிற்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீரும் கிடைக்காமல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

திரைத்துறையை சேர்ந்த சூர்யா, விஜய் சேதுபதி,விஜய் ,ரஜினிகாந்த்  உட்பட பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.20 லட்சத்தை (10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நீதிக்காகவும், 10 லட்சம் நிவாரண பொருட்களாகவும் ) புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியுதவியாக அளித்தார்.அதேபோல்  இயக்குநர் ஷங்கர்  கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் வழங்கினார்.

unknown node

இந்நிலையில்  புயலால் வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தந்து முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.