50 ஆயிரம் செலவில் சரிந்த ஆலமரத்தை உயிர்ப்பித்த கிராமமக்கள்! காரணம் என்ன?

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பல மனிதர்களின் உயிரை காவு வாங்கிய கஜா புயல், மரங்களை  மட்டும் விட்டு வைக்குமா? இந்நிலையில், வேதாரண்யம் அருகே உள்ள மறையநல்லூர் உச்சகட்டளையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இந்த ஆலமரம் தான் அந்த கிராமத்தின் அடையாளமாகவே இருந்துள்ளது. இதனையடுத்து, இந்த பழைமையான ஆலமரத்தை மீட்டெடுப்பதற்காக, அந்த கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் … Read more

கஜா புயல் இழப்பீடு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

கஜா புயலால் மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து பல நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலருக்கு உதவிகள் கிடைத்தாலும், அதிகமான மக்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கஜா புயல்:ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு …!

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, ரயில்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். கஜா புயலால் … Read more

6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம்…! அமைச்சர் தங்கமணி

6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   அமைச்சர் தங்கமணி  கூறுகையில், கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள 6000 விவசாய மின் இணைப்புகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கிவிடுவோம்.அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த வேண்டும் என போராடுபவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியும்  என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பு:பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்…! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பட்டா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல்  புதுக்கோட்டை ,நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு … Read more

திருவாரூர் இடைத்தேர்தல்: தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…!

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி  மறைவால் காலியான  திருவாரூர் தொகுதி: திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :   பின்  ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.   தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் … Read more

கஜா புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு …!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க … Read more

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடிவு : ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி சுதாகர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு பலர் தங்களது வீடு, உடமை, உறவுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் பலரும் இவர்களுக்கு உதவிகள் செய்துள்ளனர். இந்நிலையில், நாகை வேதாரண்யத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 15 குடும்பங்களுக்கு தலா. 1.5 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டி தரப்படும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது …!அமைச்சர் தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  உயரழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.இன்னும் 10 முதல் 15 நாட்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் .அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணம் அதிகளவில் வேண்டும்…. நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்…!!

கஜா புயல் நிவாரண நிதி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியுள்ளார். தமிழகத்தின் டெல்ட்டா மாவட்டத்தை கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது.இதனால் டெல்ட்டா பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீர்குலைந்து.இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் , தமிழகத்தில் உள்ளாட்சி நிதி மற்றும் கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியை தமிழகத்திற்கு … Read more