சிறகடிக்க ஆசை சீரியல்.. நகை பிரச்சனைக்கு தீர்வை கொடுத்த நாச்சியார் பாட்டி..!!

siragadikka asai 20

சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஜூலை 20] கதைக்களத்தை இங்கே காணலாம்.

விஜயா கோபத்துல மீனா மேல வளையலை  கழட்டி வீசுறாங்க  ..இதை பார்த்து முத்துவுக்கு கோவம் வருது அத்தை வேற யாராவது இருந்தா நடக்கிறதே வேற.. என்னடா தலையை எடுத்துடுவியா எடுத்துக்கோ ஆனா உன் பொண்டாட்டி கால்ல விழ மாட்டேன் அப்படின்னு சொல்றாங்க விஜயா .அண்ணாமலை  பசங்க முன்னாடி அடிக்க கூடாதுன்னு பாக்குறேன் பார்வதி இதுக்கும் சேர்த்து அவளை மீனா கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு. அதுக்கு விஜயா சொல்றாங்க அடிச்சு கொன்னாலும் பரவாயில்லை இந்த பூ கற்றவகிட்ட மன்னிப்பு கேட்க முடியாதுன்னு சொல்றாங்க.

இப்ப முத்து மீனா பார்த்து நீ என்னம்மா அழுதுட்டு இருக்க அத்தையை கதவை திறக்கலைனு  சொல்லிட்டு இருந்தா இப்ப என்ன நடந்துச்சுன்னு பார்த்தியா.. அதுக்கு அண்ணாமலை சொல்றாரு மீனாவை நல்ல வளர்த்திருக்கிறார்கள் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறா. நானும் தான் வளர்த்திருக்கிறேன் பாரு அவனால தலை குனிஞ்சுகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு அப்படின்னு சொல்றாரு .இப்ப முத்து சொல்றாரு மனோஜ் கிட்ட 27 லட்சத்தை எடுத்துட்டு ஓடுன இப்ப நகை 4 லட்சம் மொத்தமா எனக்கு வேணும்னு சொல்றாங்க.

bharvathi vijaya

மனோஜ் சொல்றாரு என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல. அதுக்கு முத்து அது உன்னோட பிரச்சனை எனக்கு தெரியாதுன்னு சொல்றாங்க .இதுக்கு நான் பொறுப்பேற்றுகிறேன் நான் தரேன் அங்கிள் எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடுக்க சொல்லுங்கன்னு ரோகினி சொல்றாங்க. முத்துவும் உன்ன நம்பி மட்டும்தான் டைம் கொடுக்கிறேன் எனக்கு பணம் வரணும்னு   சொல்லிடுறாரு. இப்ப மீனா சொல்றாங்க நான் என்னங்க பண்ண அத்தை ஏன் மேல இவ்வளவு கோவத்தை காட்டுராங்க  அப்படின்னு கேட்கவும் சுருதி  சொல்றாங்க ஆன்ட்டி  அசிங்கப்பட்டுட்டாங்க அதோட அங்கிளும்  பேசல அந்த கோபத்தை தன் உங்ககிட்ட காட்டிட்டாங்கன்னு சொல்றாங்க.

பலகுரலு உன்ன யாராவது திட்டுனா நீ என்ன பண்ணுவ அப்படின்னு கேக்குறாரு முத்து . அதுக்கு சுருதி சொல்றாங்க என்மேல எந்த தப்பும் இல்லைன்னா நான் நல்லா திட்டி விடுவேன் ,ஆன்ட்டி தூங்கி எந்திரிச்சு  பசிச்சா அவங்களே வந்து இருப்பாங்க . பார்வதி ஆண்டி  வந்தது தப்பு அதனாலதான் இவ்வளவு பிரச்சனை அப்படின்னு சொல்றாங்க. இப்ப முத்துவும் பரவாயில்லையே வந்த கொஞ்ச நாள்லயே எங்க அம்மாவ பத்தி நீ தெரிஞ்சு வச்சிருக்க அப்படின்னு சொல்றாங்க.

sutha (1)

பார்வதியும் விஜயாவும் கோவிலுக்கு போறாங்க போற இடத்துல ஸ்ருதியோடு அம்மாவ பாக்கறாங்க. நல்லா இருக்கீங்களா அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு இருக்கேன் அப்படின்னு விஜயா சொல்லுறாங்க . ஏன் டல்லா சொல்றீங்க அப்படின்னு கேக்குறாங்க அப்புறம் கையில இருந்த வளையல் காணும்  வீட்ல ஏதாவது பிரச்சனையா என்கிட்ட பணம் கேட்டு இருந்தால் நான் கொடுத்து இருப்பேன் இல்ல அப்படின்னு சொல்றாங்க. உடனே விஜயா இல்லை சம்பந்தி இன்னைக்கு எண்ணெய்  தேச்சு குளிச்சேன் அதனால மறந்து வச்சிட்டு வந்துட்டேன்னு சொல்றாங்க.

ஓ உங்களுக்கு ஞாபக மறதியா.. வயசாயிடுச்சு இல்ல .இப்போ விஜயாவும்  உங்களுக்கும்தான் சம்மந்தி வயசாயிடுச்சு .அப்படி இல்ல சம்மந்தி உங்களுக்கு மூணு பசங்க எனக்கு ஒரு பொண்ணு தானே உங்களை விட எனக்கு வயசு கம்மிதானு சுதா  சொல்றாங்க. இப்போ விஜயா பொண்ணு தான் பண திமிரு புடிச்சவளா இருக்கானா இவங்க அதுக்கு மேல அப்படின்னு சொல்றாங்க. இப்போ அண்ணாமலை முத்துவையும் மீனாவையும் பார்த்து விஜயாக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் அப்படின்னு சொல்றாரு .அதுக்கு முத்துவும் மீனாவும் என்னப்பா மன்னிப்புலாம் கேட்டுகிட்டு அப்படின்னு சொல்றாங்க. அதோட இன்னைக்கு  எபிசோடு முடிந்தது.

vijaya (4)

நாளைக்கு ப்ரோமோல பாட்டி வீட்டுக்கு வந்து இருக்காங்க. முத்து பாட்டிகிட்ட இவன் எனக்கு 29 லட்சம் தரணும் பாட்டி எனக்கு வேணும்னு சொல்றாரு. பாட்டியும் உடனே எப்படிப்பா கொடுக்க முடியும் என்று சொல்றாங்க.இப்போ முத்து அவன் தான் கடை வச்சுருக்கான்ல மாசம் 50000 கொடுக்க சொல்லுங்க . உடனே பாட்டியும் சரி நீ மாசம் மாசம் பணத்தை கொடுத்துடு இதற்கு விஜயா நீ தான் பொறுப்பு அப்படின்னு சொல்லிடறாங்க.. பாட்டி எப்படி வீட்டுக்கு வந்தாங்க என்ன நடந்துச்சுனு  நாளைக்கு தொடரில் காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi