தளபதி 65! சூர்யா 39! பற்றிய சுவாரசிய தகவல்கள்!

Default Image
  • தளபதி விஜய் தற்போது அவரது 64வது திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
  • சூர்யா நடிப்பில் அவரது 38வது திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படம் ரெடியாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் அவரது 64வது திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படமும் ரிலீசிற்கு ரெடியாகி வருகிறது. இவ்விரு படங்களும் 2020 கோடை விடுமுறையை தங்களது ரிலீஸுக்காக குறி வைத்துள்ளனர்.

அதற்கடுத்ததாக இருவரும் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளனர் என்பது தற்போது வரை குழப்பமாக இருக்கிறது. சூர்யா நடிக்கும் 40வது திரைப்படத்தை தான் வெற்றிமாறன் இயக்க உள்ளார். அப்போ 39வது திரைப்படத்தை யார் இயக்குவார் என தற்போது தகவல் கசிந்துள்ளது. அதாவது சூர்யாவின் 39வது திரைப்படத்தை ஹரி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்

அதேபோல தளபதி விஜயின் 65வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் சூர்யா படத்தை இயக்க தயாராகி விட்டதால் அதனை முடித்த பிறகுதான் விஜய் படத்திற்கு வருவார் என கூறப்படுகிறது. அதற்கிடையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளாரா? அல்லது வேறு இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளாரா என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்