காலி ரூபத்தில் அல்லு அர்ஜுன்... மிரள வைக்கும் 'புஷ்பா 2' டீசர்.!

Pushpa 2: நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, 'புஷ்பா 2' டீசரை வெளியிட்டது படக்குழு.

Pushpa2TheRuleTeaser

Pushpa 2:நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ டீசரை வெளியிட்டது படக்குழு.

அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தனக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

unknown node

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சுனில் வில்லனாகவும், ஃபகத் பாசில் முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

தற்பொழுது, படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இதனிடையே, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படத்தின் 2ஆம் பாகம், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.