"கஞ்சா பூவு கண்ணால" நடனத்தில் ரசிகர்களை தாக்க தேதியை குறித்த கார்த்தி.!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "விருமன்". இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள்

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதீதி ஷங்கர் அருமையாக நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்துள்ளார்.

unknown node

கிராம பாணியில் உருவாகும் காதல் கதை சிறப்பாக அமைந்துள்ளது என இதற்கு முன் இப்படத்திலிருந்து வெளியான ப்ரோமோ வீடியோ பாடலை தெளிவாக எடுத்துரைத்தது. தற்போது, படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், படத்திற்கான முதல் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கிடையில், படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோ அன்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

unknown node

அந்த வகையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘கஞ்சா பூவு கண்ணால’ முழு பாடல் வருகின்ற 25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

unknown node