இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் அணி மோதி வருகிறது . இப்போட்டி நாட்டிங்ஹாம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
unknown nodeஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்,ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் அதிரடியாக விளையாடி பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டன.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.பின்னர் சிறிது நேரத்திலே 53 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
unknown nodeபிறகு களமிறங்கிய உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் இருவரும் கூட்டணியில் அதிரடியாக விளையாடி மைதானத்தின் நாலாபுறமும் பங்களாதேஷ் அணியின் பந்துகளை பறக்கவிட்டனர். டேவிட் வார்னர் அதிரடியில் சதத்தை நிறைவு செய்தார். பிறகு விடாமல் அதிரடியாக விளையாடி 147 பந்தில் 166 ரன்கள் குவித்தார்.அடுத்ததாக மத்தியில் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 89, க்ளென் மேக்ஸ்வெல் 32, ஸ்டீவன் ஸ்மித் 1 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன்கள் குவித்தனர்.
unknown nodeபங்களாதேஷ் அணி பந்து வீச்சில் சவுமியா சர்க்கார் 3 விக்கெட்டை பறித்தார்.382 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்க உள்ளது.