தொடக்க வீரர்கள் அடித்த அதிக ரன்கள் பட்டியலில் ரோகித் சர்மா-கே.எல் ராகுல்

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடை பெற்றது. முதலில்

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடை பெற்றது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது. மழை காரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 இலக்காக வைத்தனர்.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,கேஎல் ராகுல் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். தொடக்க விக்கெட்டை இந்திய அணி 136 ரன்னில் இழந்தனர்.இந்நிலையில் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர்கள் அடித்த அதிக ரன்கள் பட்டியலில் ரோகித் சர்மா,கேஎல் ராகுல் நான்காம் இடத்தை பிடித்தனர்.175* – Haynes/Lara WI ,1992147 – Atherton/R Smith ENG ,1996146 – Finch/Warner AUS, 2019136 – Rohit/Rahul IND, 2019