இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
unknown nodeஇங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் 3 பவுண்டரி அடித்து 26 ரன்கள் எடுத்து 9.3 ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
unknown nodeபின்னர் களமிறங்கிய ஜோ ரூட் , ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் கூட்டணி இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.ஜானி பேர்ஸ்டோவ் 8 பவுண்டரி , 3 சிக்ஸர் விளாசி 90 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.அடுத்ததாக இறங்கிய மோர்கன் , ஜோ ரூட் இருவரும் கடைசிவரை அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை குவித்தனர்.இறுதியாக 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 397 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மோர்கன் 148 ரன்கள் விளாசினார்.
unknown nodeஆப்கானிஸ்தான் அணியில் குல்படின் நாயப் ,தவ்லத் சத்ரான் தலா 3 விக்கெட்டை பறித்தனர்.ஆப்கானிஸ்தான் 398 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.