உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி குல்படின் தலைமையில் விளையாடியது. ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் படும் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருநாள் ,டெஸ்ட் ,டி 20 ஆகிய போட்டிகளில் கேப்டனாக ரஷீத்கானை தேர்வு செய்து உள்ளது.முன்னாள் கேப்டன் ஆஸ்கர் துணை கேப்டனாக அறிவித்து உள்ளது.இதற்கு முன் ஒருநாள் போட்டியில் குல்படின் நெய்ப் , டெஸ்ட் போட்டிகளுக்கு ரஹ்மத் , டி 20 ரஷீத்கான் ஆகியோர் கேப்டனாக இருந்தனர்.
unknown nodeதற்போது ரஷீத்கான் தலைமையில் முதல்கட்டமாக செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.மேலும் நவம்பர் மாதம் 5-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று டி 20, மூன்று ஒருநாள் போட்டி , ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.