தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தமாக 71 மருத்துவ கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் என மொத்தம் 6000 அரசு மருத்துவ இடங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையமானது புதிய கட்டுப்பாடுகளை மருத்துவ கல்லூரிகளுக்கு விதித்தது. அதன்படி மாநிலத்தின் மக்கள் தொகையை கணக்கிட்டு பத்து லட்சத்திற்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே ஒதுக்க […]
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வு நடத்தி காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது. காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 7-ஆம் தேதி வரை அகில இந்திய கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நவம்பர் 7 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர்அறிவுறுத்தியுளளார். அகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, […]
இந்தியா முழுக்க இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப நீட் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய பொது கவுன்சிலில் பங்கேற்பர். மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் குறிப்பிட்ட அளவு அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், மீதம் உள்ள குறிப்பிட்ட அளவு இடங்கள் மத்திய அரசுக்கும் வழங்கப்படும். தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவ கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என சேர்த்து […]
மருத்துவ மாணவர்களில், கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தல். மருத்துவ மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில் 5,647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் கல்லூரிகளில் சேருவதற்கு இன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், […]
தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் அக்.6ம் தேதி வரை நீட்டிப்பு. MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் அக்டோபர் 6ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. MBBS, BDS படிப்புகளில் சேர இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் வெளியாகின. இந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள […]
வரும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் எனும் பொதுமருத்வ படிப்பு மற்றும் பி.டி.எஸ் எனும் பல்மருத்துவ படிப்பு ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப தேதியை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவர்கள் , இம்மாதம் 22ஆம் தேதி முதல் தமிழக அரசு மற்றும், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் […]
மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல். MBBS, BDS படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மருத்துவ கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஓரிரு நாட்களில் தொடங்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அரசின் அனுமதி பெற்று, கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்கள் தேசிய தேர்வு முகமையிடம் இருந்து […]
நொய்டா: லலிதா என்ற பெண் கடந்த இரண்டு மாதங்களாக போலி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நபர் தலைமை தாங்கிய IVF மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். கடைசியாக ஆகஸ்ட் 19 ஆம் தேதி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். அன்றைய தினம், தீவிர அலட்சியம் மற்றும் அவசரகால சேவைகள் இல்லாததால் கோமா நிலைக்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தனது குடும்பத்தினரால் பிஸ்ராக்கில் உள்ள ரியாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஆகஸ்ட் 26 அன்று சிகிச்சைப் […]
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பெண் மருத்துவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபிஷேக் என்பவரது மனைவி ராசி. அபிஷேக் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. ராசி 2020 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் பட்டம் பெற்ற நிலையில், மேற்கொண்டு பிஜி படிப்பிற்காக நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதி உள்ள தனது […]
அகில இந்திய தொகுப்பில் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மாநில அரசு கல்லூரிகளிடமே ஒப்படைக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் 24 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த 24 இடங்களும்,வீணாக போவதாக அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், […]
தேர்வு இல்லாமலேயே இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, MBBS பட்டம் வழங்க உக்ரைன் அரசு முடிவு. லைசன்ஸ் தேர்வு ரத்து: உக்ரைனில் மருத்துவம் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் தேர்வு எனப்படும் இறுதித் தேர்வை நடத்தாமலேயே எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. மருத்துவம் படித்த ஐந்தாவது ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசன்ஸ் மற்றும் KROK தேர்வு ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. MBBS பட்டம்: மருத்துவ படிப்பில் மூன்றாம் […]
சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில மருத்துவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த […]
தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை […]
பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் பிப்.5ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு […]
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு. 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு,அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள் உள்ளன.மேலும்,சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்நிலையில்,தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.அதன்படி,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் […]
எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வில் தாமதம்,பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்டகாரணங்களால்,இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-22 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில்,மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தலாம் […]
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958 இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) 1925 இடங்களும் உள்ளன.அந்த வகையில் மொத்தம் 8,883 மருத்துவ படிப்பு இடங்களுக்கான அறிவிப்பாணை 19 ஆம் தேதி (இன்று) வெளியாகிறது என்றும், அதன்படி,எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் […]
அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் ஆன்லைன் மூலம் விநியோகம். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும்,மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு 6,958 இடங்களும், பல் மருத்துவ […]