#Breaking : செப்டம்பர் 22 முதல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.!
வரும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் எனும் பொதுமருத்வ படிப்பு மற்றும் பி.டி.எஸ் எனும் பல்மருத்துவ படிப்பு ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப தேதியை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவர்கள் , இம்மாதம் 22ஆம் தேதி முதல் தமிழக அரசு மற்றும், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்கள் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளர்.
இதற்கான முழு அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். இதன் விண்ணப்ப இறுதி தேதி அக்டோபர் 3ஆம் தேதிஎனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in www.tnmedicalselection.org ஆகிய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.