தமிழகத்தில் காலியாக உள்ள 83 MBBS இடங்கள்… மாநில அரசுக்கு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை.!

Medical Counsil seats

இந்தியா முழுக்க இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப நீட் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய பொது கவுன்சிலில் பங்கேற்பர். மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் குறிப்பிட்ட அளவு அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், மீதம் உள்ள குறிப்பிட்ட அளவு இடங்கள் மத்திய அரசுக்கும் வழங்கப்படும்.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவ கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என சேர்த்து மொத்தம் சுமார் 11,600 மருத்துவ காலிப்பணியிடங்கள் உள்ளன. நீட் தேர்வு முடிந்து, இதுவரை நீட் தேர்வு தேர்ச்சி மூலம் நடைபெற்ற கவுன்சலிங் மூலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றது.

GROUP VII-A தேர்வுக்கான தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

நடைபெற்று முடிந்த MBBS மருத்துவ சேர்க்கையில் இந்தாண்டு மட்டும் 83 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இவை அனைத்தும் மத்திய அரசு இடஒதுக்கீட்டில் வழங்கப்படும் இடங்களாகும். தமிழக அரசு கல்லூரியில் 16 இடங்களும், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 3 இடங்களும் , சுயநிதிகல்லூரிகள், நிகர்நிலை கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என மொத்தமாக 83 MBBS சேர்க்கை இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது.

அதே போல பல் மருத்துவசேர்க்கை இடங்களில் அரசு கல்லூரியில் 24 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 206,  நிகர்நிலை கல்லூரிகளில் 51 இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தும் மருத்துவ இடம் கிடைக்காமல் பல மாணவர்கள் காத்திருக்கும் நிலையில் மத்திய அரசு சார்பில் இத்தனை இடங்கள் காலியாக உள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தேசிய மருத்துவ கவுன்சில் , காலியாக உள்ள MBBS சேர்க்கை இடங்களை மாநில அரசிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் செல்ல வேண்டும், மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்றும் தமிழக மாநில அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை , மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஒருவேளை மத்திய மருத்துவ கவுன்சில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டால் ஐந்தரை வருடங்களும் அந்த 83 MBBS சேர்க்கை காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த வருடம் 6 மத்திய அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்