பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல்முறையாக ஆன்லைனில் தொடங்கியது!
தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது.
மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.
எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது.
இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி, https://tnmedicalselection.net/ என்ற இணைய தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு முதல் முறையாக இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.மேலும்,இந்த கலந்தாய்வு பிப்.5 ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
அதன்பின்னர்,பிப்.7 முதல் 10 ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து,இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் குறித்த அறிவிப்பு பிப்.15 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.பிப்.16 ஆம் தேதி மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதனையடுத்து,பிப். 17 முதல் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் மாணவர்கள் அசல் சான்றிதழை சமர்பித்து கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.