MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு!
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் அக்.6ம் தேதி வரை நீட்டிப்பு.
MBBS, BDS படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் அவகாசம் அக்டோபர் 6ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
MBBS, BDS படிப்புகளில் சேர இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் வெளியாகின.
இந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களில் 2022-23-ஆம் கல்வியாண்டில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு கடந்த செப்.22 முதல் விண்ணப்பம் தொடங்கியது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில் மருத்து படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் அக்.6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.