மாணவர்களே மறந்துறாதீங்க..! இன்றைக்கு தான் கடைசி நாள்..!

மருத்துவ மாணவர்களில், கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தல்.

மருத்துவ மாணவர்களில், கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தல்.

மருத்துவ மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதில் 5,647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் கல்லூரிகளில் சேருவதற்கு  இன்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள், இன்று மாலை 5 மணிக்குள் அந்தந்த  கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள் சேகரிக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.