இஸ்லாமியர்களின் புனித மாதமான இந்த ரமலான் மாதத்தில் மசூதிகளில் தொடர்ச்சியாக தொழுகைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகராகிய காபூல் பகுதியில் உள்ள கலிபா சாஹிப் மசூதியில் நேற்று தொழுகை நடை பெற்றுள்ளது. இந்த தொழுகையில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த முஸ்லிம்களை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. நேற்று மசார்-இ-ஷரீப் பகுதியில் மட்டுமல்லாமல் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய ஐந்து பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது மசூதியில் நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது புர்கா அணிந்த பயங்கரவாதி வெடிகுண்டு வீச்சு. ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் சோபோர் நகரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது நேற்று மாலை புர்கா அணிந்த பயங்கரவாதி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இஸ்லாமிய உடை அணிந்திருந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதி, நடுத்தெருவில் நின்று, தன் பையில் இருந்த வெடிகுண்டை எடுத்து, சிஆர்பிஎஃப் […]
உக்ரைன் மீது கடந்த சில நாட்களாக உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்,முக்கிய நகரங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.அந்த வகையில்,உக்ரைனின் தெற்கு பகுதியான மரியபோல் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. இதனையடுத்து,அப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதன்காரணமாக,அப்பகுதியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு: குறிப்பாக குடிநீர்,மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சூழலில் மரியபோல் நகரில் ரஷ்ய […]
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைன் டோனட்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதற்கிடையில்,ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், […]
தலைநகர் டெல்லியிலுள்ள காசிப்பூர் சந்தை பகுதியில் மர்ம பையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள காசிப்பூர் மலர் சந்தை அருகில் வெடிகுண்டுகளுடன் கூடிய மர்ம பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு பை கண்டறியப்பட்டதும் காவல்துறையினர் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பையிலிருந்த வெடிகுண்டுகளை, வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளனர். பரபரப்பாக பொதுமக்கள் இயங்கி வரக்கூடிய மலர் சந்தையில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
காபூலில் இரண்டு குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை மற்றும் அதன் அருகே இன்று இரண்டு குண்டு வெடிப்பு வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சத்தமும் கேட்டதாகவும்,சாட்சியங்கள் சிலர் செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும்,காபூலில் நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் […]
பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் எனும் கிராமத்தில் பை ஒன்றில் வெடிகுண்டு டிபன் பாக்ஸ் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் எனும் நகருக்கு அருகே உள்ள தலை கிராமத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாப் மாநில காவல் துறை இயக்குநர் ஜெனரல் தின்கர் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள தலைக் கிராமத்தில் ஒரு பை கிடந்ததாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், […]
ஒடிசாவில் உள்ள எம்.எல்.ஏவின் இரு வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் ஆளும் பிஜேடி எம்எல்ஏ சூரிய மணி பைத்யா அவர்களின் இரு வீடுகள் மீது கச்சா வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சி ஆதரவாளர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கேஷபூர் கிராமத்தில் உள்ள பதனா சாஹி, சட்டமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு மற்றும் நிர்மல்ஜாரில் உள்ள அவரது வாடகை வீடு […]
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டை கைப்பற்றி அதனை செயலிழக்க செய்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க ரயில் நிலையத்தில் வைத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் உசேன் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சதித்திட்டம் தீட்டி செய்யப்பட்டது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் நலத்துறை மந்திரி ஜாகிர் உசேன் அவர்கள் கொல்கத்தா செல்வதற்காக நிம்திதா ரயில் நிலையத்திற்கு சென்றார். அப்பொழுது சில மர்ம நபர்கள் திடீரென […]
அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தலானது. 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பரபரப்பான தேர்தல் காலத்திற்கு மத்தியில், அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 வெடிகுண்டுகளை, காவல்துறையினர் செயலிழக்க செய்துள்ள நிலையில், தேர்தலுக்கு மத்தியில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அங்கு பெரும் பராபராப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் தற்பொழுது வலிமை படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் கொடுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கொடுள்ளார் மேலும் அதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் அஜித் வீட்டில் […]
முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது. சேலையூரை சேர்ந்தவர் வினோத் குமார் இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார், இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார் , போன் செய்து சற்று நேரத்தில் முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார் உடனே உஷாரான போலீசார் முதல்வர்கள் வீட்டிற்கு நிபுணர்களும் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கும் சென்று […]
தளபதி விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி ஏற்பட்ட வதந்தியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் செய்த செயல் என்றும், அது வதந்தி என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் அவர்களின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சாலிகிராமத்தில் நடிகர் விஜய்க்கு சொந்தமாக வீடு […]
ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் கொடுத்தனர். இதைத்தொடந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பது தெரிந்தது. மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தற்போது வரை அரசு தரப்பிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு ராணுவத்தினர் மற்றும் அமெரிக்க படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஹுவா மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஹஜீ ஷேக் […]
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அண்ணா மேம்பாலத்தில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் .இதன் பின்னர் வெடிகுண்டு வெடித்த இடத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் வெடிகுண்டு வீச்சு தொடர்பாக கமருதீன்,பிரசாந்த்,ஜான்சன்,ராஜசேகர் ஆகிய 4 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அண்ணா மேம்பாலத்தில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் .இதன் பின்னர் வெடிகுண்டு வெடித்த இடத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் விசாரணை மேற்கொண்டார்.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அண்ணா மேம்பாலத்தில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் . நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் கார் கண்ணாடிகள் உடைந்து சிதறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.