ஒடிசாவில் எம்.எல்.ஏ வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளது – 4 பேர் காயம்!

Four MLAs have been injured in a bomb blast at the house of two MLAs in Odisha.

ஒடிசாவில் உள்ள எம்.எல்.ஏவின் இரு வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் ஆளும் பிஜேடி எம்எல்ஏ சூரிய மணி பைத்யா அவர்களின் இரு வீடுகள் மீது கச்சா வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சி ஆதரவாளர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கேஷபூர் கிராமத்தில் உள்ள பதனா சாஹி, சட்டமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு மற்றும் நிர்மல்ஜாரில் உள்ள அவரது வாடகை வீடு மீது குண்டுகளை வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த பொழுது பைத்யா அவர்கள் ஒரு கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று இருந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் நிர்மல்ஜாரில் உள்ள அவரது இல்லத்திற்கு விரைந்துள்ளார். பின் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் அரசியல் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த பின்பு இரு இடங்களிலும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ஆனால் இந்த குண்டு வீசியது யார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை எனவும் போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் எம்.எல்.ஏ வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளது – 4 பேர் காயம்!