உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தை சேர்ந்த சாகிசைன் எனும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு வட்ட அதிகாரி பிரேம் லால் தம்தா கூறுகையில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவருக்கு பலத்த காயம் கூறியுள்ளார். மேலும், பலத்த காயமடைந்த இருவரும் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷரீப் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அபு அலி சினா-இ-பால்கி மாவட்ட மருத்துவமனையின் தலைவர் கௌசுதின் அன்வாரி கூறுகையில், இந்த குண்டு வெடிப்பின் போது கிட்டத்தட்ட 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், 5 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்.
ராஜஸ்தானிலுள்ள ராஜ்சமந்த் எனும் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்ததுள்ளது. அப்போது திடீரென்று பேருந்து பாறை ஒன்றின் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்தப் பேருந்து உதய்ப்பூரிலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்து ஓட்டுநர் தூங்கிக்கொண்டிருந்த போது ஓட்டியதால், பாறை மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை, எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை மக்களில் பலர் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் அரசின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ள […]
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் அசாமில் கடந்த 48 மணிநேரத்தில் கடுமையான புயலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 592 கிராமத்திலுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் எனும் பகுதியில் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக தேன் கூட்டின் மீது கல்லெறிந்து விளையாடியுள்ளனார். இதனை அடுத்து இந்த தேனீக்கள் கலைந்து அருகிலிருந்தவர்களை விரட்ட ஆரம்பித்துள்ளது. அப்பொழுது தேனீக்கள் கொட்டியதில் 75 வயது முத்து எனும் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தேனீக்கள் கொட்டியதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில் உள்ள திரிகுட் பஹார் எனும் இடத்தில் உள்ள கேபிள் கார்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கேபிள் கார்களில் குறைந்தது 16 மணி நேரத்திற்கு 48 பேர் தொங்கியபடியே இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய விமானப்படை மற்றும் NDRF குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு நாற்பத்தி எட்டு பேரும் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம நவமி தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.பின்னர்,பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,ராம நவமி தினத்தை முன்னிட்டு அசைவ உணவுகளை சாப்பிட கூடாது என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களிடம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய இரு தரப்பிலும் […]
உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள கல்லூரிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து மாணவியை காயப்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலிகாரின் சர்ரா எனும் பகுதியில் உள்ள சவுத்ரி நிஹால் சிங் இன்டர் எனும் கல்லூரிக்குள் நேற்று திடீரென்று சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. சிறுத்தையை பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் அலறியடித்துள்ளனர். கிட்டத்தட்ட அந்த வகுப்பறையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது வகுப்பறையில் இருந்த மாணவி ஒருவரை சிறுத்தை காயப்படுத்தியுள்ளது. இதை பார்த்தும் மாணவர்கள் ஒன்றும் செய்ய இயலாமல் […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் எனும் இடத்தில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து மீட்பு படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த சக்ராத் பகுதி காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு […]
பாகிஸ்தானில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து கீழே விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கராச்சி பகுதியில் இருந்து சாக்வால் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தின் போது பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் 7 […]
மத்திய பிரதேச மாநிலத்தில் டம்பர் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பிந்த் எனும் மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று டம்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்திற்குள் இருந்த பயணிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த பகுதியில் காவலர்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டு […]
சோமாலியா நாட்டிலுள்ள புலாபுர்தே நகரில் உள்ள விமான நிலையத்தில் நில கண்ணிவெடி வெடித்ததில் 5 பேர் காயமடைந்துள்ளனர். சோமாலியா நாட்டில் உள்ள ஹிரன் பகுதியில் புலாபுர்தே நகரில் மறுசீரமைப்பு ஏற்படுத்திய விமான நிலையத்தில் நிலக்கண்ணி வெடிகளை அல் ஷபாப் பயங்கரவாதிகள் புதைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த கண்ணி வெடிகள் சில மணி நேரங்களுக்குப் பின்பதாக வெடித்து சிதறியுள்ளது. இந்த தாக்குதலில் விமான நிலையத்திலிருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் முழுவதுமாக சேதம் […]
கர்நாடகாவில் சிமெண்ட் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாபூர் என்னும் மாவட்டத்தில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மற்றும் எதிரே வந்த ஜீப் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் அதிவேகமாக வந்த ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. 6 […]
உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள வேன் ஒன்று பயணம் செய்து கொண்டிருந்த பொழுதே தீ பிடித்து இருந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ்-அயோத்தி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு திரும்பிய பொழுது வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த வேனில் இருந்த பயணிகள் பலர் இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் லக்னோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீக்காயமடைந்தவர்களில் 8 பேர் பெண்கள் […]
சவுதி அரேபியா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் , ஏமன் நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரான் ஆதரித்து வருகிறது. மேலும், ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுவரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான […]
காசியாபாத் பகுதியில் வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத் கோடா மகாலட்சுமி காலனியில் வசித்து வரக்கூடிய பெண் ஒருவர் தனது சகோதரர் வீட்டிற்கு ரக்ஷாபந்தன் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மழை பெய்ததால் அந்த பெண் தனது 8 மாத குழந்தை மற்றும் அவரது தாயாருடன் பால்கனியின் கீழ் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது இந்த பால்கனி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் […]
துருக்கியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துருக்கி நாட்டின் பாலிகேசிா் மாகாண நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திடீரென சாலையோர சரிவில் பேருந்து உருண்டு விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் இருந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]
ஒடிசாவில் உள்ள எம்.எல்.ஏவின் இரு வீட்டின் மீது குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் ஆளும் பிஜேடி எம்எல்ஏ சூரிய மணி பைத்யா அவர்களின் இரு வீடுகள் மீது கச்சா வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கட்சி ஆதரவாளர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கேஷபூர் கிராமத்தில் உள்ள பதனா சாஹி, சட்டமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பு மற்றும் நிர்மல்ஜாரில் உள்ள அவரது வாடகை வீடு […]
மத்திய பிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறை இடிந்து விழுந்ததில், 22 கைதிகள் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் எனும் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் இந்த சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்து, சிறையில் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிறையில் இருந்த 22 கைதிகள் காயமடைந்துள்ளனர். அதில் ஒரு கைதி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை […]