சிஆர்பிஎஃப் முகாம் மீது புர்கா அணிந்த பயங்கரவாதி வெடிகுண்டு வீச்சு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது புர்கா அணிந்த பயங்கரவாதி வெடிகுண்டு வீச்சு.
ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் சோபோர் நகரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது நேற்று மாலை புர்கா அணிந்த பயங்கரவாதி ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இஸ்லாமிய உடை அணிந்திருந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதி, நடுத்தெருவில் நின்று, தன் பையில் இருந்த வெடிகுண்டை எடுத்து, சிஆர்பிஎஃப் முகாம் மீது வீசியுள்ளார்.
சிஆர்பிஎஃப் முகாம் மீது குண்டை வீசியதை தொடர்ந்து உடனே அந்த பயங்கரவாதி அந்த இடத்தை விட்டு ஓடுவதை காண முடிகிறது. முகாம் மீது குண்டுகளை வீசியபோது சில இரு சக்கர வாகனங்களும் அவ்வழியாகச் செல்கிறது. பெட்ரோல் குண்டினால் ஏற்பட்ட தீயை அருகில் இருந்தவர்கள் அணைக்க முயன்றும், சிஆர்பிஎஃப் முகாம் தீயில் எறிந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
A burqa clad person hurled a petrol bomb at a CRPF camp in Sopore town of Jammu and Kashmir’s Baramulla district on Tuesday evening. The act was caught on CCTV cameras. pic.twitter.com/3nGev1kte7
— JAMMU LINKS NEWS (@JAMMULINKS) March 29, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025