பஞ்சாப் : பையுடன் வீசப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிப்பு…!

Default Image

பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் எனும் கிராமத்தில் பை ஒன்றில் வெடிகுண்டு டிபன் பாக்ஸ் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் எனும் நகருக்கு அருகே உள்ள தலை கிராமத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாப் மாநில காவல் துறை இயக்குநர் ஜெனரல் தின்கர் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள தலைக் கிராமத்தில் ஒரு பை கிடந்ததாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், பையை திறந்து பார்த்தபோது அதில் வெடிகுண்டுகள் அடங்கிய ஒரு பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அதில் ஐந்து கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கி இருந்ததாகவும், அந்த பாக்ஸில் சுமார் 2 கிலோ வெடிமருந்து இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பை பாகிஸ்தான் எல்லை வான் பகுதியில் பறந்த ட்ரோன்கள் மூலமாக இந்திய பகுதிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து ஆராய தேசிய பாதுகாப்புப் படை உதவியை நாடி உள்ளோம் எனவும், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். வரவிருக்கும் சுதந்திர தினத்தன்று ஏதேனும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்